AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரஜினிகாந்தின் தர்மன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்? உற்சாகத்தில் ரசிகர்கள்

Dharman Movie Update | தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக தற்போது உருவாகி வரும் படம் தர்மன். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ரஜினிகாந்தின் தர்மன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்? உற்சாகத்தில் ரசிகர்கள்
தர்மன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Jul 2026 16:21 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்து உள்ளார். மிகவும் பிரமாண்டமாக பல பான் இந்திய நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி உள்ள இந்த ஜெயிலர் 2 படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்த நிலையில் படம் வருகின்ற 14-ம் தேதி அக்டேபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தர்மன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது.

நடிகர் ரஜினிகாந்தின் 173-வது படமாக உருவாகி வரும் இந்த தர்மன் படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கி வருகிறார். முன்னதாக இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பதை உறுதி செய்வதில் சிக்கல் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் நடிகர்கள் குறித்த அப்டேட்கள் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்தின் தர்மன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்?

ரஜினிகாந்தின் தர்மன் படத்தில் நடிகர் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பகுதி சென்னையில் படமாக்கப்படவுள்ளது. சண்டைக் காட்சி, சில வசனக் காட்சிகள் மற்றும் சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில் உருவாகும் பிரம்மாண்டமான அறிமுகப் பாடல் ஆகியவற்றை உள்ளடக்கிய முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், விறுவிறுப்பான திரில்லர் அம்சங்களுடன் கூடிய ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக இது அமையும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… நகைச்சுவை, காதல், காவியம், அதிரடி நிறைந்த அன்பே டயானா… வெளியானது கலகல ட்ரெய்லர்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தளப் பதிவு:

Also Read… பிரபல பாடகி எஸ்.ஜானகி மரணம் – சோகத்தில் ரசிகர்கள்

Follow Us