Kishen Das: கிஷன்தாஸூக்கு ஜோடியாகும் சஞ்சனா.. புது பட டைட்டில் போஸ்டரை வெளியிட்ட ஆர்யா!
Kishan Das And Sanjana Krishnamoorthy: தமிழ் சினிமாவில் இளம் நடிகராக ஆண்டுக்கு ஒரு ஹிட் படத்தை கொடுத்துவருபவர் கிஷன்தாஸ். இவர் தற்போது புது படத்தில் ஹீரோவாக இணைந்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இணைந்துள்ளார். இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டிலை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.
இளம் நடிகராக கோலிவுட் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் கிஷன்தாஸ் (Kishen Das). இவர் கடந்த 2019ம் ஆண்டில் அஜித் குமாரின் (Ajith Kumar) “நேர்கொண்ட பார்வை” (Nerkonda Paarvai) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தவர். இந்த படத்திற்கு பின் கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்ட இவருக்கு, முதல் படமாக அமைந்ததுதான் முதல் நீ முடிவும் நீ (Mudhal Nee Mudivum Nee). கடந்த 2022ம் ஆண்டில் வெளியான இப்படம் பள்ளிப்பருவ காதல் மற்றும் ஒரு காதலை விட்டுவிட்டால் என்ன நடக்கும் என்பதை குறித்த ஒரு பேண்டஸி கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் மூலம் இவருக்கு சினிமாவில் நடிகராக ஒரு அங்கீகாரம் கிடைத்தது என கூறலாம். இப்படத்திற்கு பின் சிங்கப்பூர் சலூன், தருணம் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.
இதில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த படம்தான் ஆரோமலே. இந்த படத்தில் எழுத்தாளராகவும் இவர் பணியாற்றியிருந்தார். இதில் நடிகர் கிஷன்தாஸ் மற்றும் நடிகை சிவத்தமிகா இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை அடுத்ததாக கிஷன்தாஸ் புதிய படத்தில் இணைத்துள்ளார்.




இதையும் படிங்க: அரசன் படத்தில் இசையமைக்காதது ஏன்? விளக்கம் கொடுத்த சந்தோஷ் நாராயணன்!
கிஷன்தாஸ் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியின் கூட்டணி:
நடிகர் கிஷன்தாஸ் தற்போது, லப்பர் பந்து பட நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியுடன் புது படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு சீ யூ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் கிஷன்தாஸ் மற்றும் சஞ்சனா இருவரும் ஜோடியாக இணைந்து நடித்துவரும் நிலையில், காதல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறதாம். இதை அறிமுக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவட்சன் இயக்க, ஏ.ஆர்.என்டேர்டைமென்ட் நிறுவனமானது தயாரித்துவருகிறது. இந்த படத்தின் அறிவிப்பை நடிகர் ஆர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: திருமண பேச்சில் மீண்டும் சிக்கிய பிரபாஸ்.. பொண்ணு யார் தெரியுமா?
நடிகர் ஆர்யா வெளியிட்ட கிஷன்தாஸின் சீ யூ படத்தின் முதல் பார்வை குறித்த பதிவு:
#SeeU ❤️
Happy to share the First Look of #SeeU with all of you.
Produced by #AjmalKhan @reyaahari & DirectorVijay
Directed by @santhoshsrivtsn
A beautiful journey filled with love, emotions, and memories that will stay with us forever. Hope this pair @kishendas & @isanjkayy… pic.twitter.com/vEiLlOaL0G
— Arya (@arya_offl) July 10, 2026
இந்த படமானது எமோஷனல் காதல் கதைக்களத்தில் உருவாகிவரும் நிலையில், அதில் கிஷன்தாஸ் இப்படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்துவருகிறாராம். இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 60 சதவீதம் நிறைவடைந்ததாகவும், இந்த 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் ஸிணீம் இசையமைத்துவருகிறார். இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிவருகிறார்.