AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Santhosh Narayanan: அரசன் படத்தில் இசையமைக்காதது ஏன்? விளக்கம் கொடுத்த சந்தோஷ் நாராயணன்!

Santhosh Narayanan Explains Arasan Omission; தென்னிந்திய சினிமாவிப்பில் சிறந்த இசையமைப்பாளர்கள் ஒருவராக இருந்துவருபவர் சந்தோஷ் நாராயணன். இவர் வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் இசையமைத்து ஹிட் கொடுத்திருந்தார். அந்த படத்தின் பின்னணி கதையின் உருவாகும் அரசன் படத்தில் இசைமைக்காதது ஏன் என்பது குறித்து சந்தோஷ் நாராயணன் விளக்கமாக பேசியுள்ளார்.

Santhosh Narayanan: அரசன் படத்தில் இசையமைக்காதது ஏன்? விளக்கம் கொடுத்த சந்தோஷ் நாராயணன்!
சிலம்பரசன் மற்றும் சந்தோஷ் நாராயணன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 Jul 2026 16:09 PM IST

தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து பிரம்மாண்ட இசையமைப்பாளராக இருந்துவருபவர் சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan). இவரின் இசையமைப்பில் சூர்யா (Suriya) முதல் பிரபாஸ் (Prabhas) போன்ற தென்னிந்திய உச்ச நடிகர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவரின் இசையமைப்பில் தமிழில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகியிருந்த இப்படத்தின் வெற்றிக்கு பின், சமீபத்தில் சமந்தாவின் தெலுங்கு படமான மா இந்தி பங்காரம் (Maa Inti Bangaaram) என்ற படத்திற்கும் சந்தோஷ் நாராயணன்தான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் குறைவான பாடல்கள் இருந்தாலும், பின்னணி இசை மிரட்டலாக இருந்தது.

மேலும் தற்போது சந்தோஷ் நாராயணன் தமிழில் சேயோன் (Seyon), தெலுங்கில் பிரபாஸின் கல்கி 2 (Kalki 2) போன்ற பிரம்மாண்ட படங்களின் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சந்தோஷ் நாராயணன், அதில் அரசன் படத்தில் இசையமைப்பாளராக இசையமைக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் கொடுத்திருந்தார்.

இதையும் படிங்க: அதர்வாவின் இதயம் முரளி படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதா? மக்களின் விமர்சனம் இதோ

அரசன் படத்தில் இசையமைக்காததன் காரணம் குறித்து பேசிய சந்தோஷ் நாராயணன்:

சமீபத்தில் பேட்டியில் சந்தோஷ் நாராயணனிடம், “வட சென்னை படத்திற்கு நீங்க இசையமைத்து சிறப்பான பாடங்களை கொடுத்தீர்கள். அதுபோல அதன் பின்னணியில் உருவாகிவரும் அரசன் படத்திற்கு நீங்கள் ஏன் இசையமைக்கவில்லை?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய சந்தோஷ் நாராயணன், “ஒரு படத்தை செட் பண்ணி, அந்த இயக்குநர் அதற்காக படும் பாடுகளை நினைத்தால் ரொம்பவே கஷ்டமாக இருக்கும். அதுக்குள் நிறைய விஷயங்கள் இருக்கும், அந்த சமையத்தில் இயக்குனரிடம் நீங்கள் ஏன் என்னுடன் வேலை பார்க்கவில்லை என கேட்பது அநாகரிகமாக இருக்கும்.

இதையும் படிங்க: இயக்குநர் சுதா கொங்கரா வழக்கில் எதிர்பாராத திருப்பம்.. இதயம் முரளி படத்திற்கு தடையில்லை!

எடுத்துக்காட்டாக கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் பேட்ட படத்தில் அனிருத் இசையமைத்திருந்தார். பின் மகான் படத்திற்கும் முதலில் அவர்தான் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. பின், நான் அந்த படத்திற்காக இசையமைத்தேன். மேலும் கடைசி விவசாயி படம் இளையராஜாவுடன் பனுவத்தைக் அறிவித்தார்கள். பிறகு நான்தான் அந்த படத்திற்கும் இசையமைத்தேன். அதுபோல சினிமாவில் நிறைய விஷயங்கள் நடக்கும். எதுவாக இருந்தாலும் வரும்போது நல்லபடியாக பண்ணவேண்டும், வந்த பிறகு சுதப்பிவிட கூடாது” என அதில் கூறியிருந்தார்.

அரசன் படம் குறித்து சந்தோஷ் நாராயணன் பேசிய வீடியோ பதிவு:

சந்தோஷ் நாராயணன் தற்போது தமிழில் சேயோன் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். மேலும் தெலுங்கில் கல்கி 2 மற்றும் சியான்63 போன்ற படங்களில் பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us