மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான அம்மாவில் ஏற்பட்டுள்ள நிர்வாக நெருக்கடி குறித்து நடிகை பீனா ஆண்டனி மனம் திறந்து பேசியுள்ளார். சங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தில் அனுபவக் குறைவு மற்றும் கோஷ்டி பூசல்தான் இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய பீனா ஆண்டனி, பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகுதான் சங்கத்தில் நிலவி வரும் பிரச்சினையின் தீவிரம் தங்களுக்கு புரிந்ததாக கூறினார்.