இயக்குநர் சுதா கொங்கரா வழக்கில் எதிர்பாராத திருப்பம்.. இதயம் முரளி படத்திற்கு தடையில்லை!
Sudha Kongara Lawsuit: தென்னிந்திய சினிமாவில் பெண் இயக்குநராக தொடர்ந்து படங்களை இயக்கிவருபவர் சுதா கொங்கரா. இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் பராசக்தி. டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் உருவான இப்படத்திற்கு தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக வழக்கு தொடர்ந்த நிலையில், எதிர்பாராத திருப்பம் வந்துள்ளது.
கோலிவுட் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநராக இருந்துவருபவர் சுதா கொங்கரா (Sudha Kongara). இவரின் இயக்கத்தில் இதுவரை குறைவான படங்கள் வெளியாகியிருந்தாலும், நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த விதத்தில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இதில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan), அதர்வா (Atharvaa)மற்றும் ரவி மோகன் போன்ற பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தார்கள். இப்படம் கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் வெளியகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அரசியல் தொடர்பான கதைக்களத்தில் வெளியாகியிருந்த இப்படம், மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் தோல்வியில் முடிந்தது. இயக்குநராக இப்படத்தில் பணியாற்றிய சுதா கொங்கராவிற்கு, பராசக்தி படக்குழு (டான் பிக்ச்சர்ஸ்) (Dawn Pictures) சம்பளப் பாக்கி வைத்ததாக, அவர் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் உருவான அதர்வாவின் இதயம் முரளி படத்தின் ரிலீஸை இடைக்காலத் தடை செய்யக்கோரி மனு அளித்திருந்தார். இன்று (10/07/2026) அந்த மணவை விசாரித்த நீதிபதி எதிர்பாராத முடிவை தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: துல்கர் சல்மானின் 41-வது படத்தின் டைட்டில் இதுதான்… வெளியானது அப்டேட்!
அதர்வாவின் இதயம் முரளி படத்திற்கு தடை கோரி வழக்கு:
டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் அதர்வா நடித்துள்ள புது படம்தான் இதயம் முரளி. இந்நிறுவனத்தின் கீழ் பராசக்தி படமும் உருவாகியிருந்த நிலையில், அதில் சுதா கொங்கராவிற்கு ரூ 8.29 கோடியை படக்குழு சம்பள பாக்கியாக வைத்ததாக வழக்கு தொடர்ந்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இதயம் முரளி படத்தின் ரிலீஸை இடைக்கால தடைச் செய்யக்கோரி சுதா கொங்கரா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையும் படிங்க: படங்களில் அந்த உடை எனக்கு சௌகரியமாக இல்லை – நடிகை காஜல் அகர்வால்
சுதா கொங்கராவின் வழக்கு தொடர்பாக இணையத்தில் வைரலாகிவரும் பதிவு:
பராசக்தி படத்தை இயக்கிய வகையில் தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி ரூ.8.39 கோடியை செலுத்த உத்தரவிடக்கோரி இயக்குநர் சுதா கொங்கரா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்#Parasakthi #SudhaKongara #ChennaiHighCourt #sdcworld pic.twitter.com/Ut4Uwoj0OD
— SDC World (@sdcworldoffl) July 10, 2026
சுதா கொங்கரா வழக்கிற்கு ஐகோர்ட் தீர்ப்பு:
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில், சுதா கொங்கராவின் வழக்கு விசாரிக்கப்பட்டிருந்தது. அந்த விசாரணையின்போது நீதிபதி, சம்பள பாக்கி தொடர்பான பிரச்சனையை மத்தியஸ்தர் மூலமாக நீர்த்துக்கொள்ளுமாறு சுதா கொங்கராவிற்கு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இதயம் முரளி படத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம், அந்த கோரிக்கையை தள்ளுபடி செய்துள்ளது. தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.