Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sudha Kongara: புறநானூறு என்ற டைட்டில் பராசக்தியாக மாறியது இப்படித்தான்- சுதா கொங்கரா!

Sudha Kongara About Purananooru Title Change Reason: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பெண் இயக்குநராக படத்தை இயக்கி சாதனை செய்துவருபவர் சுதா கொங்கரா. இவரின் இயக்கத்தில் சமீபத்தில் பராசக்தி என்ற படமானது வெளியாகியிருந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் ஆரம்பத்தில் புறநானூறு என அழைக்கப்பட்ட நிலையில், அது எப்படி டைட்டில் மாறியது என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

Sudha Kongara: புறநானூறு என்ற டைட்டில் பராசக்தியாக மாறியது இப்படித்தான்- சுதா கொங்கரா!
சூர்யா மற்றும் சுதா கொங்கரா Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 20 Jan 2026 16:59 PM IST

இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இதில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2026 ஜனவரி 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் ரவி மோகனின் (Ravi Mohan) கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றிருந்தது என்றே கூறலாம். இந்த படமானது கடந்த 1964ம் ஆண்டில் நடந்த இந்தி மொழித் திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் அமைந்திருந்த நிலையில், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்துவந்தது.

மேலும் இப்படத்திற்கு திரையரங்குகளில் பெருமளவு வரவேற்புகள் இல்லாமல் போன நிலையில், வசூல் ரீதியாக இப்படத்திற்கு பெரிதும் வரவேற்பு இல்லை என்பது தெரிந்ததே. முதலில் இப்படத்தில் சூர்யா (Suriya) நடிக்கவிருந்த நிலையில், புறநானுறு (Purananooru) என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. அந்த டைட்டில் பராசக்தி என்று எப்படி மாறியது என்பது குறித்து சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இரண்டாவது குழந்தைக்கு வெய்டிங்… மீண்டும் கர்ப்பமாக இருக்கும் அட்லீ – ப்ரியா தம்பதி!

புறநானுறு டூ பராசக்தியாக டைட்டில் மாறியது குறித்து சுதா கொங்கரா பேச்சு :

அந்த நேர்காணலில் பேசிய சுதா கொங்கரா, “பராசக்தி படமானது புறநானூறு பட கதையை மையமாக கொண்டதுதான். முதலில் அந்த படத்திற்காகத்தான் கதையையே எழுதியிருந்தேன். எனக்கு அந்த புறநானுறு என்ற டைட்டில் ரொம்பவே பிடித்திருந்தது. இந்த தலைப்பை பயன்படுத்திதான் நாங்கள் முதலில் பணியாற்றினோம். பின் அந்த படம் சூர்யாவுடன் கைவிடப்பட்டுவிட்டது.

இதையும் படிங்க:  போர் தொழில் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தப் படத்திற்கு ஒரு அழுத்தம் ஏற்பட்டது – கர பட இயக்குநர் சொன்ன விசயம்

புறநானூறு என்ற டைட்டிலும் இல்லை. இந்த பராசத்தி படத்தின் டைட்டிலுக்காக என்ன செய்வது என்ற குழப்பம் இருந்தது. ஒரு கட்டத்தில் பராசக்த் என்ற டைட்டில் ஒரு சிறந்த தேர்வாக இடிக்கும் என நாங்கள் நம்பினோம். அதனால்தான் இந்த டைட்டிலை தேர்வு செய்திருந்தோம்” என அவர் அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

பராசக்தி திரைப்படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த் பராசக்தி படமானது வெளியாகி கிட்டத்தட்ட 10 நடக்கலை கடந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக வட்டாரங்கள் கூறப்படுகிறது. உலகளாவிய வசூலில் சுமார் 75 கோடிகளுக்கு கிட்ட வசூலித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. விரைவில் இப்பட ஓடிடி ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.