பிரபல ஹிந்தி திரைப்படமான ஷோலே வெளியானது 50 ஆண்டுகள் கடந்தாலும், அதன் சில காட்சிகள் இன்னும் மக்கள் மனதை விட்டு நீங்கவில்லை. அந்த படத்தில் வீரு என்ற கதாபாத்திரம், தனது காதலை நிரூபிக்க தண்ணீர் தொட்டியின் மேல் ஏறி நிற்கும் காட்சி மிகவும் பிரபலமானது. அதே போன்ற ஒரு சம்பவம் தற்போது பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. பீகாரில் பங்கடா ஜகீர்தாரி என்ற கிராமத்தில் 20 வயதான அர்பிதா குமாரி என்ற இளம்பெண் மொபைல் டவரில் ஏறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.