அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் உள்ள இங்லாங் எகோபி மலைப்பகுதியில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 'சுகோய் 30எம்கேஐ' போர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஸ்க்வாட்ரன் லீடர் அனுஜ் வசிஷ்ட் மற்றும் பிளைட் லெப்டினன்ட் பூர்வேஷ் துர்காகர் ஆகிய இரு இளம் விமானிகள் வீரமரணம் அடைந்தனர். அனுஜ் வசிஷ்ட்டின் குடும்பத்தினர் அவருக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்து வந்த நேரத்தில் இந்தத் துயரச் செய்தி வந்துள்ளது. அனுஜுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.