இன்று தொடங்குகிறது 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு.. சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்!
10th Public Examination Begins Today | தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (மார்ச் 11, 2026) 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இந்த தேர்வில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
சென்னை, மார்ச் 11 : தமிழகத்தில் (Tamil Nadu) 2025 – 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு (12th Public Examination) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (மார்ச் 11, 2026) முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (10th Public Examination) தொடங்க உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர். இந்த நிலையில், இன்று தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்று தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு
இன்று தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 12,467 பள்ளிகளை சேர்ந்த சுமார் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இந்த தேர்வில் தனித்தேர்வர்களாக 25 ஆயிரத்து 801 பேரும் பங்கேற்க உள்ளனர். அதுமட்டுமன்றி சிறைவாசி தேர்வர்களாக 395 பேர் தேர்வு எழுத உள்ளனர். அதன்படி, மொத்தமாக சுமார் 9 லட்சத்து 9 ஆயிரத்து 2 பேர் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.
இதையும் படிங்க : இனி விடுதிகளில் காபி, டீ, சப்பாத்தி, தோசை கிடையாது.. தவிப்பில் பேச்சுலர்ஸ்




12,292 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
இந்த தேர்வில் பங்கேற்க உள்ள சுமார் 12, 292 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதும்போது தடை இல்லாத மின்சாரம் வழங்கவும், தேர்வு பணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், தேர்வு மையங்களில் மாணவர்கள் மற்றும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு போதுமான வசதிகளை செய்து தரவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு.. ஆட்டோக்கள் இயங்குவதில் சிக்கல்.. நிலமை என்ன?
தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள 45,000 ஆசிரியர்கள்
இன்று தொடங்கும் இந்த 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்வு பணிகளுக்காக சுமார் 45,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக சுமார் 4,800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது தவிர அம்மை நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தனி தேர்வு அறை, உடனடி மருத்துவ சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்திட தேர்வு மையங்களை கண்காணிக்கும் அதிகாரிகள் மற்றும் துறைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.