AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை, ஒற்றை அர்தத்தில் பேசினேன் – உதயநிதி விளக்கம்

தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் நடந்த போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. தஞ்சை எஸ்பி சுந்தரவர்த்தன், திருவிடைமருதூர் டிஎஸ்பி அன்பழகன் ஆகியோர் உதயநிதியிடம் விசாரித்தனர். காவல் நிலையத்தில் மாலை 6.50 மணி அளவில் தொடங்கிய விசாரணை, இரவு 8.10 மணி அளவில் நிறைவடைந்தது.

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 04 Aug 2026 21:53 PM IST

தஞ்சாவூர், ஆகஸ்ட் 4 : தஞ்சாவூர் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் நடந்த போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. தஞ்சை எஸ்பி சுந்தரவர்த்தன், திருவிடைமருதூர் டிஎஸ்பி அன்பழகன் ஆகியோர் உதயநிதியிடம் விசாரித்தனர். காவல் நிலையத்தில் மாலை 6.50 மணி அளவில் தொடங்கிய விசாரணை, இரவு 8.10 மணி அளவில் நிறைவடைந்தது.

உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

விடுவிக்கப்பட்ட அவர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை, ஒற்றை அர்த்தத்தில்தான் பேசினேன். என் குடும்பத்தினர் என்னை அப்படி வளர்க்கவும் இல்லை. நான் தவறாக பேசாததை, சில தலைவர்கள் விமர்சித்தது வருத்தமளிக்கிறது என்றார்.

இதையும் படிக்க : உதயநிதி ஆபாசமாக பேசவில்லை தவெகவுக்கு விழுந்த அடி – மு.க.ஸ்டாலின் கண்டனம்

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து வெளியேறும்போது, ​​ தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கட்சித் தொண்டர்களை பார்த்து கையசைத்தார். காவிரி விவகாரத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில்பேசியதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், அவர் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி

 

தஞ்சாவூர் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சை எஸ்பி சுந்தரவர்த்தன், திருவிடைமருதூர் டிஎஸ்பி அன்பழகன் ஆகியோர் உதயநிதியிடம் விசாரித்தனர். காவல் நிலையத்தில் மாலை 6.50 மணி அளவில் தொடங்கிய விசாரணை, கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக இரவு 8.10 மணி அளவில் நிறைவடைந்தது. விசாரணை முடிவடைந்து விடுவிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியே காத்திருந்த தொண்டர்களுக்கு காரில் நின்றபடி கையசைத்தார். உதயநிதியை பார்த்த மகிழ்ச்சியில் தொண்டர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். முன்னதாக அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்னதாக வானவேடிக்கைகளையும் நடத்தினர்.

இதையும் படிக்க : தவெக எம்எல்ஏ மீதும் நடவடிக்கை தேவை, எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை தேவை – பெ.சண்முகம் பரபரப்பு கருத்து

செங்கிப்பட்டியில் இருந்து புறப்படும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி திருச்சியிலிருந்து விமானத்தில் புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்  திருச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரியில் தமிழ்நாட்டுக்கான தண்ணீரைக் கேட்டுப் பெற இந்த அரசுக்கு வக்கு இல்லை; விவசாயிகளுக்கு தவெக செய்த துரோகங்கள், பொய் வாக்குறுதி குறித்து ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.
இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை, ஒற்றை அர்த்தத்தில்தான் பேசினேன். என் குடும்பத்தினர் என்னை அப்படி வளர்க்கவும் இல்லை. நான் தவறாக பேசாததை, சில தலைவர்கள் விமர்சித்தது வருத்தமளிக்கிறது என்றார்.

Follow Us