Malavika Mohanan: அச்சமற்ற தீப்பொறி.. மாளவிகா மோகனன் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட சர்தார் 2 படக்குழு!
Malavika Mohanans 33rd Birthday: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகியாக இருந்துவந்தவர் மாளவிகா மோகனன். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் உருவாகியுள்ள புது ஆக்ஷன் திரைப்படம்தான் சர்தார் 2. இன்று (04/08/2026) மாளவிகா மோகனன் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், சர்தார் 2 ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது.
மலையாள சினிமாவின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன் (Malavika Mohanan). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் நாயகியக நடித்து அசத்தியிருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தி ராஜா சாப் (The raja Saab). இந்த திரைப்படத்தில் நடிகை பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலமாகவே இவர் தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் அவர் ஆக்ஷன் வேடத்தில் நடித்து அசத்தியிருந்த நிலையில், இதற்கு பின் இவர் நடித்துவந்த புது திரைப்படம்தான் சர்தார் 2 (Sardar 2). இந்த படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் (PS.Mithran) இயக்க, கார்த்தி (Karthi) லீட் நாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் பார்ட் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் மாளவிகா மோகனன் அதிரடி ஆக்ஷன் நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், இன்று 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதியில் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவரை வாழ்த்தி படக்குழு ஸ்பெஷல் போஸ்ட்ரை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்
மாளவிகா மோகனனின் பிறந்தநாளை முன்னிட்டு சர்தார் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Wishing the “Fearless Firebrand” @MalavikaM_ a very happy birthday 🎂#Sardar2GirlPower#OnceAspyAlwaysaSpy#Sardar2FromSep10@Karthi_Offl @Psmithran @iam_SJSuryah @ivyofficial2023 @SamCSmusic @george_dop @editorvijay @rajeevan69 pic.twitter.com/TH4M91LgKY
— Prince Pictures (@Prince_Pictures) August 4, 2026
சர்தார் 2 படத்தின் ரிலீஸ் எப்போது:
இந்த படமானது அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், இதில் கார்த்தி ரெட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கார்த்திக் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் நடித்துள்ளார். இதில் மெயின் வில்லனாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் ஆஷிகா ரங்கநாத், ராஜீஷா விஜயன், யோகி பாபு மற்றும் சாண்டி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது ஆக்ஷன் கதையில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கரின் ஒன்ஸ் மோர் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
மாளவிகா மோகனன் நடித்துவரும் புது படங்கள்:
நடிகை மாளவிகா மோகனன் தற்போது தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இவர் இறுதியாக தமிழில் இதயம் முரளி என்ற படத்தில் கேமியோ வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படத்திற்கு பின் சர்தார் 2 படத்தில் நடித்துவந்தார். மேலும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் பாக்கெட் நாவல் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.