இனி ஆவணங்களை பொதுமக்களே ஆன்லைனில் உருவாக்கலாம் – புதிய வசதியை அறிமுகப்படுத்திய பத்திர பதிவுத்துறை
Tamil Nadu Online Property Registration : தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களைத் தாங்களே இணையவழியில் உருவாக்கும் புதிய வசதியைப் பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக பொதுமக்கள் www.tnreginet.gov.in என்ற இணையதளத்தில் உள்ள இந்த வசதியைப் பயன்படுத்தி உருவாக்கிக்கொள்ளலாம்
சென்னை, நவம்பர் 12 : ஆன்லைன் முறை மூலம் இடைத்தரகர்கள் இன்றி எளிய வழிமுறையில் பொதுமக்கள் தங்கள் ஆவணத்தை தாங்களே உருவாக்கி பதிவு செய்து கொள்ளும் வகையில் புதிய வசதியை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன மூலம் பொதுமக்கள் இனி ஆவணங்களுக்காக அரசு அலுவலகங்களுக்கு (Registration Office) அலையாமல், தங்களுக்கு தேவையான ஆவணங்களை தாங்களே ஆன்லைனில் உருவாக்கும் வகையில் 4 எளிய முறையிலான புதிய வசதியை பத்திர பதிவுத்துறை அறிவித்துள்ளது.
இனி ஆவணங்களை பொதுமக்களே ஆன்லைனில் உருவாக்கலாம்
தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களைத் தாங்களே இணையவழியில் உருவாக்கும் புதிய வசதியைப் பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பதிவுத்துறை அலுவலகங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் நேரமும், இடைத்தரகர்களால் ஏற்படும் சிக்கலும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : கந்த சஷ்டி விழா – திருச்செந்தூருக்கு 2 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு




இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் பத்திர பதிவுத்துறையில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தி, பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களை STAR 3.0 இணையதளத்தில் எளிய நான்கு படிநிலைகளில் உருவாக்கும் வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக பொதுமக்கள் www.tnreginet.gov.in என்ற இணையதளத்தில் உள்ள இந்த வசதியைப் பயன்படுத்தி உருவாக்கிய ஆவணங்களை காகிதமில்லா பதிவு முறை வழி தாங்களே பதிவுக்கு சமர்ப்பிக்கலாம். பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவினைத் தாங்களே உருவாக்கி ஆவணங்களை இணையவழியில் பதிவுக்கு சமர்ப்பிக்கும் எளிய படிநிலைகள் கீழே விளக்கப்பட்டுள்ளது.
எப்படி மேற்கொள்வது?
இதனையடுத்து பதிவுத்துறையின் www.tnreginet.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்ததும், ஆவணப்பதிவு என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். Click Here என்பதை தேர்ந்தெடுக்கவும். அத
1. விற்பனை, செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை என எந்த வகை ஆவணத்தை உருவாக்க விரும்புகிறீர்களோ அந்த ஆவண வகையைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
2. விற்பவர், வாங்குபவர் மற்றும் சாட்சிகளின் விவரங்கள், சொத்து விவரங்கள் மற்றும் பிற விவரங்களை நிரப்பி சமர்ப்பிக்கவும். உடன் தங்களுக்கு ஒரு டி.பி எண் வழங்கப்படும்.
3. உங்கள் ஆவணத்தை சரிபார்த்துப் பதிவிறக்கம் செய்யுங்கள். ஆவணம் உருவாக்கப்பட்டவுடன் “எனது ஆவணங்கள்” பகுதியில் அதன் PDF வடிவத்தைப் பார்க்கலாம். பின்னர் PDF ஆகவும் பதிவிறக்கம் செய்யலாம்.
4. பின்னர் ஆன்லைன் வழி ”செலுத்துக” என்ற தெரிவின் வழி கட்டணம் செலுத்துலாம்.
5. பின்னர் பதிவு செய்தல் ஆவணப்பதிவு காகிதமில்லா ஆவணப் பதிவிற்கான வரைவு ஆவண சுருக்கம் என்பதை தெரிவு செய்யவும்.
6. மேலே மூன்றாம் படிநிலையில் தெரிவிக்கப்பட்ட டி.பி எண்ணை உள்ளீடு செய்து கீழ்க்கண்டவாறு தகவல்களை உருவாக்கி கொள்ளவும்.
7. டோக்கன் முன்பதிவு மற்றும் காகிதமில்லா பதிவுக்கு ஆன்லைனில் OTP மூலம் இ-சைன் செய்யப்பட வேண்டும்.
பின்னர், தங்களுக்கு தேவையான நாள் மற்றும் நேரத்தினை தெரிவு செய்து முன்பதிவு டோக்கனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிக்க : முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது ரூ.3.35 கோடி மோசடி புகார்.. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு!
ஆவணதாரர்கள் மற்றும் சாட்சிகள் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு முன்பதிவு டோக்கனில் தேர்ந்தெடுத்த நாள் மற்றும் நேரத்தில் நேரில் செல்லவும்.
சார்பதிவாளர் அலுவலகத்தில், சார்பதிவாளர் அடையாளம் மற்றும் ஆதார் அங்கீகாரத்தைச் சரிபார்த்து இந்திய முத்திரைச் சட்டம், 1899 மற்றும் பதிவு சட்டம், 1908க்கு உட்பட்டு, கைரேகை அல்லது விழித்திரை (Iris) பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் UIDAI வழியாக இறுதி ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்டு, சார்பதிவாளர் ஆவணத்தில் இ-சைன் (e-sign) மூலம் கையொப்பமிட்டு, ஆவணம் பெறப்பட்ட Loginக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணம் திருப்பி அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் இடைத்தரகர்கள் இன்றி மேற்கண்ட எளிய வழிமுறையில் பொதுமக்கள் தங்கள் ஆவணத்தை தாங்களே உருவாக்கி பதிவு செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.