பிக்பாஸ் வீட்டில் ஜுனியர் பிக்பாஸ் பதவிக்காக நடக்கும் சலசலப்பு – அனல்பறக்கும் புரோமோ வீடியோ இதோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெறும் ஜூனியர் பிக்பாஸ் பதவிக்காக வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சண்டையிட்டுக்கொள்ளும் அனல்பறக்கும் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சின்னத்திரையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகின்றது இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தமிழ் மொழியில் தொடங்கியதில் இருந்தே தமிழக மக்களிடையே அதிக வரவேற்பைப் பெறு ரியாலிட்டி நிகழ்ச்சியாக இது உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இதுவரை 9 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சியும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து 9 வாரங்கள் முடிவடைந்து தற்போது 10வது வாரம் மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டு இருக்கின்றது. இந்தியாவிலேயே எந்த மொழியிலும் இல்லாத ஒரு நிகழ்வாக இந்த தமிழ் நிகழ்ச்சியில் பிக்பாஸின் குரலே இல்லாமல் சென்று கொண்டு இருக்கின்றது. இந்த நிகழ்வு பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு மட்டும் இன்றி பார்வையாளர்களுக்கும் சர்ப்ரைஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸின் அறிவுத்தலுக்கு பதிலாக வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஒருவராக உள்ளவர் ஜூனியர் பிக்பாஸாக இருந்து அறிவுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் முதல் ஜூனியர் பிக்பாஸாக வினோத் பாபு தேர்வானார். அந்த ஜூனியர் பிக்பாஸிற்கு சலுகைகள் என்ன என்பது குறித்து தெரிந்ததும் அவரை அந்த பதவியில் நிலைக்க விடாமல் மற்றப் போட்டியாளர்கள் அவரை மாற்றினர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஜூனியர் பிக்பாஸாக முனியம்மாள் மற்றும் மூன்றாவது ஜூனியர் பிக்பாஸாக அன்சர் தேர்வானார்.




பிக்பாஸ் வீட்டில் ஜுனியர் பிக்பாஸ் பதவிக்காக நடக்கும் சலசலப்பு:
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்று 67-வது நாளிற்கன முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அந்த புரோமோ வீடியோவில் அடுத்ததாக யார் ஜூனியர் பிக்பாஸாக தேர்வாக வேண்டும் என்பதில் இன்று வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே சலசலப்பு ஏற்படுகின்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் யார் ஜூனியர் பிக்பாஸாக மாற உள்ளனர் என்பது இன்றைய எபிசோடைப் பார்க்கும் போதே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புரோமோ விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பிக்பாஸில் நேரடியாக மோதிக்கொள்ளும் ஜேசன் – வினோத் பாபு… வைரலாகும் புரோமோ வீடியோ!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day67 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/Y2tNEB8FtS
— Vijay Television (@vijaytelevision) November 12, 2026
Also Read… அனிருத் – காவ்யா மாறனின் காதல் கிசு கிசு முதல் கல்யாணம் வரை…. ஒரு ரீவைண்ட்!