தொடங்கியது அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் – வைரலாகும் தகவல்!
Ajith Kumars Dare Devil Movie Shooting Starts Today | நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் படம் டேர் டெவில். இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்று முதல் ஹைதராபாத்தில் தொடங்கி உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார் (Ajith Kumar). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவருக்கு பான் இந்திய மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் குமார் தனது ரேஸிங்கிலும் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் பல நாடுகளுக்கு சென்று கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு பல விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு குட் பேட் அக்லி மாபெரும் வெற்றியைப் பெற்றது.
இந்த குட் பேட் அக்லி படத்தை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்தர் தான் நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக தற்போது உருவாகும் டேர் டெவில் படத்தையும் எழுதி இயக்குகிறார். மேலும் இந்த டேர் டெவில் படத்தை ஷாலினி அஜித் குமார் தயாரிக்க உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலமாக தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




தொடங்கியது அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங்:
அஜித் குமார் நடிக்கும் டேர் டெவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இப்படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது படக்குழுவினர் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர். ஹைதராபாத் படப்பிடிப்பு கட்டத்தைத் தொடர்ந்து, அடுத்தகட்டப் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் வெளிநாடுகளில் நடைபெறவுள்ளன. இப்படத்தில் அஜித் குமார், ஸ்ரீலீலா, உண்ணி முகுந்தன், ஆர். பார்த்திபன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படம் 2027-ஆம் ஆண்டு கோடைகாலத்திலோ அல்லது ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டோ வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read… இறுதி செய்யப்படும் இரண்டு வானம் படத்தின் ரிலீஸ்? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
🔥 #DareDevil – Shooting Begins
The shooting of #AjithKumar’s DareDevil has officially commenced in Hyderabad.
After the film’s announcement a few months ago, the team has now kick-started production.
Following the Hyderabad schedule, the next phases are planned in Chennai and overseas locations.
⭐ Cast: Ajith Kumar, #Sreeleela, #UnniMukundan, R. Parthiban and others.
The film is reportedly targeting a release in Summer 2027 or as an Ayudha Pooja special 🔥
— Movie Tamil (@_MovieTamil) November 12, 2026
Also Read… அன் ஆர்டினரி மேன் படத்தின் 2-வது சிங்கிள் லார்டா லபக்கா ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ