எனது ரசிகர்களுக்காக… ஒரு நாள் அவர்களை நான் பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன் – அஜித் குமார்
Ajith Kumar Video | தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் சமீபத்தில் தனது ரசிகர்கள் குறித்து எமோஷ்னலாக பேசியுள்ளார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்பே ரேசிங்கிள் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். அதன் காரணமாகவே மோட்டார் துறையில் மெக்கனிக்கான பணியாற்றி உள்ளார். அதனைத் தொடர்ந்து குடும்ப சூழல் காரணமாக நடிப்பை தனது முழு நேர வேலையாக மாற்றிக் கொண்டார் நடிகர் அஜித் குமார். அதனைத் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். அதுமட்டும் இன்றி உலக அளவில் தனக்கு என்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இவரது நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் வெளியான இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட அடித்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. மேலும் அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் படப்பிடிப்பு பணிகள் நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டில் முதல் வாரத்தில் தொடங்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.




எனது ரசிகர்களுக்காக… ஒரு நாள் அவர்களை நான் பெருமைப்படுத்துவேன்:
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தனது சினிமாவை மட்டும் இன்றி ரேஸிங்கிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அஜித் குமார். இதன் காரணமாக அஜித் குமாரின் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டாலும் அவர் பல நாடுகளுக்கு சென்று ரேஸிங்கிள் வெற்றிப் பெறுவது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அஜித் குமார் தனது ரசிகர்களுக்காக அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக நிச்சயமாக நடந்துகொள்வேன் என்று தெரிவித்துள்ளார். இது அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Ajithkumar to his Fans:
“I hope Someday I make them all proud.. I hope.. I hope..” https://t.co/VyV8fFZKvM
— Laxmi Kanth (@iammoviebuff007) October 24, 2026
Also Read… பிக்பாஸில் இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு பதிலாக வரும் பிரபல நடிகை… வைரலாகும் தகவல்