AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு பதிலாக வரும் பிரபல நடிகை… வைரலாகும் தகவல்

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கடந்த 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய நிலையில் இன்று பிரபல நடிகை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிக்பாஸில் இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு பதிலாக வரும் பிரபல நடிகை… வைரலாகும் தகவல்
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Oct 2026 13:39 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் நாட்டில் தொடங்கிய போது அந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த போது உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இந்தி மொழியில் முதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய போது அந்த மொழியில் உச்ச நடிகராக உள்ள சல்மான் கான் அதனை தொகுத்து வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு பிறகு அவரே தற்போது 20 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தமிழ் மொழியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட போது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வாரம் வாரம் இறுதியில் கமல் ஹாசனின் எபிசோடு வரும் போது இன்று போட்டியாளர்களிடம் என்ன பேசுவார் என்ற எதிர்பார்க்கப்படும்.

இந்த நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் கமல் ஹாசனுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ஒரு வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து கடந்த 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு பதிலாக வரும் பிரபல நடிகை:

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 7-வது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாகவே விஜய் சேதுபதி சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி குழு ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் ரம்யா கிருஷ்ணன் இருக்கு வீடியோவையும் பகிர்ந்துள்ளது. இதனால் இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read… வீழா வீரா படலுக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு… இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் நெகிழ்ச்சிப் பதிவு!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ராம் சரண் பட இயக்குநருடன் இணையும் சூர்யா? வைரலாகும் தகவல்

Follow Us