AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Rukmini Vasanth: கனம் பட இயக்குநருடன் புதிய தமிழ் படத்தில் இணைந்த ருக்மிணி வசந்த்!

Rukmini Vasanth New Tamil Movie: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் அதிகம் கொண்டாடும் நாயகியதாக இருந்தவருபவர் ருக்மிணி வசந்த். இவர் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடிக்கும் நிலையில், இவரின் புதிய தமிழ் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை ருக்மிணி வசந்த் பகிர்ந்துள்ளார்.

Rukmini Vasanth: கனம் பட இயக்குநருடன் புதிய தமிழ் படத்தில் இணைந்த ருக்மிணி வசந்த்!
ருக்மணி வசந்த் புதிய தமிழ் படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 24 Oct 2026 14:16 PM IST

கன்னட சினிமாவின் மூலம் நடிகையாக நுழைந்தவர் ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth). ரிக்ஷித் ஷெட்டியுடன் திரைப்படங்களில் நடித்து இவருக்கு பிரபலம் கிடைத்திருந்தது. அதன் பிறகு தெலுங்கு சினிமாவிலும் நடிக்க தொடங்கியிருந்தார். இவ்வாறு தென்னிந்திய மொழிகளில் நடித்துவரும் இவருக்கு முதல் தமிழ் படமாக அமைந்தது ஏஸ் (Ace). கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு (Vijay Sethupathi) ஜோடியாக நடித்து தமிழில் நுழைந்தார். இந்த படத்திற்கு பின் தமிழில் இவருக்கு பிரபலத்தை கொடுத்த திரைப்படம் மதராஸி (Madharaasi). இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைந்திருந்தார்.

இந்த படத்திற்கு பின் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார். அந்த விதத்தில் தமிழிலும் புதிய திரைப்படம் ஒன்றில் ருக்மிணி வசந்த் இணைந்துள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: கண்ணும் கண்ணும்… ஆர்யாவின் ஹலோ காதல் படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள்!

கனம் பட இயக்குநரின் இயக்கத்தில் இணைந்த ருக்மிணி வசந்த்:

தமிழில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான கனம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர் ஸ்ரீ கார்த்திக். இவரின் இயக்கத்தில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக எந்த படங்களும் வெளியாகவில்லை என்ற நிலையில், தற்போது நடிகை ருக்மிணி வசந்தை லீட் நாயகியாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

இதையும் படிங்க: அப்பாவ போல… விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

இந்த படத்தில் ருக்மிணி வசந்த் இணைந்தது தொடர்பாக அறிவிப்புகள் வெளியான நிலையில், இன்னும் இப்படத்தின் டைட்டில் என்ன என அறிவிக்கப்படவில்லை. தற்காலிகமாக இப்படத்தை “ருக்மிணி & பிரண்ட்ஸ்” என அழைத்துவருகிறார்கள். இது தொடர்பான பதிவு வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

தனது புதிய தமிழ் திரைப்படத்தை குறித்து ருக்மிணி வசந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

நடிகை ருக்மிணி வசந்த் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் படங்களில் நாயகியாக நடித்துவருகிறார். மேலும் தற்போது மலையாள சினிமாவிலும் நாயகியாக நுழைந்துள்ளார். நடிகர் நிவின் பாலியின் புதிய படத்தில் அவர் நாயகியாக நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கிய நிலையில், பேக் டூ பேக் படங்களில் ருக்மிணி வசந்த் பிசியாக இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us