Rukmini Vasanth: நீச்சலுடையில் தன்னை பற்றிய ஏ.ஐ புகைப்படங்கள்.. போலீசில் புகார் கொடுத்த ருக்மிணி வசந்த்!
Rukmini Vasanth's Brave Clarification: சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் ருக்மிணி வசந்த். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ள நிலையில், இவருக்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் சமீபத்தில் ருக்மிணி வசந்த் நீச்சலுடையில் இருப்பதுபோன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவந்தது. இந்நிலையில் அது ஏ.ஐ புகைப்படம் எந்றம், அது குறித்து போலீசில் புகார் அளித்திருப்பதாக அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) கன்னட சினிமாவின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். கடந்த 2023ம் ஆண்டில் வெளியான “சப்த சாகரதாச்சே எல்லோ” (Sapta Saagaradaache Ello) என்ற படத்தின் மூலம் இவருக்கு தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. பின் இப்படத்தின் பார்ட் 2 படத்திலும் நடித்து பரவலான வரவேற்பை பெற்றிருந்தார். இந்த வரிசையில் தமிழில் இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது, ஏஸ் (Ace). கடந்த 2025ம் ஆண்டில் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) நடிப்பில் வெளியான இப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸின் (AR Murugadoss) இயக்கத்தில் வெளியான மதராஸி (Madharaasi) என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்கள் மத்தியிலும் நெருக்கமானார். இதை தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கிவிட்டார். மேலும் காந்தாரா 2 (Kantara 2) படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடித்து, தனது நடிப்பின் சிறப்பையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இவ்வாறு ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்துவந்தார். மேலும் சமீபத்தில் நடிகை ருக்மிணி வசந்த், பச்சைநிற நீச்சலுடையில் (Bikini) பாலிவுட் படத்தில் நடிப்பதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகிவந்தது. இந்நிலையில், அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ குறித்து ருக்மிணி வசந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.




இதையும் படிங்க: ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த கர படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? எதில் பார்க்கலாம்!
நீச்சலுடை ஏ.ஐ வீடியோ மற்றும் புகைப்படங்கள் குறித்து விளக்கமளித்த நடிகை ருக்மிணி வசந்த்:
அந்த பதிவில் நடிகை ருக்மிணி வசந்த், “என்னைப்போல் சில ஏ.ஐ புகைப்படங்கள் சில இணையத்தில் பரவிவருகிறது. இப்படி ஒரு போலி புகைப்படங்களை உருவாக்கி வெளியிடுவது மிகவும் தவறான செயல். இது எனது தனியுரிமையை பாதிக்கிறது. இதற்காக சட்டப்படியான நடவெடிக்கைகளை எடுத்துவருகிறேன். அதன் காரணமாக இப்படிபோன்ற புகைப்படங்களை யாரும் பகிரவேண்டாம்.
இதையும் படிங்க: சூர்யா சார் இந்தப் பிரம்மாண்ட வெற்றியின் ஒவ்வொரு துளிக்கும் நீங்கள் முழுமையாகத் தகுதியானவர் – இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்
இதை உருவாக்கியவரின்மீது சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது” என அதில் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் குறித்த போலியான விஷயங்களுக்கு நடிகை ருக்மிணி வசந்த் தைரியமாக விளக்கம் கொடுத்துள்ள நிலையில், அவரின் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டுவருகிறார்.
நடிகை ருக்மிணி வசந்த் வெளியிட்டிருந்த விளக்க பதிவு தொடர்பான பதிவு:
Actress #RukminiVasanth has issued an official statement against AI-generated fake images being circulated online in her name.
She clarified that the images are completely fabricated and called the circulation of such manipulated content a serious violation of privacy. Her team… pic.twitter.com/T0A5gq8dSb
— Being Shivam (@itsbeingshivam) May 23, 2026
நடிகை ருக்மிணி வசந்த் டாக்ஸிக் படத்தில் மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது இன்னும் வெளியாகவில்லை. இதையடுத்து ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகிவரும் டிராகன் படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். இதை கேஜிஎப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தமிழிலும் நடிப்பதற்கு கதைகளை கேட்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.