மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3000 சிலிண்டர்கள்.. எடுத்துச்சென்ற மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து – ஆட்சியர் எச்சரிக்கை…
பொதுமக்கள் தங்களிடம் கிடைத்துள்ள சிலிண்டர்களை உடனடியாக அதிகாரிகளிடம் அல்லது ஹெச்பிசிஎல் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அந்த சிலிண்டர்களை ஹெச்பிசிஎல் நிறுவன அலுவலகம், அருகிலுள்ள ஹெச்பிசிஎல் விநியோகஸ்தர்கள், கலாபூர் தாசில்தார் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் (SDO) அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜூலை 9, 2026: மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ராய்காட் மாவட்டத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பதால்கங்கா எல்பிஜி சிலிண்டர் நிரப்பும் ஆலையில் இருந்து சுமார் 3,000 எரிவாயு சிலிண்டர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்கள்:
தொடர்ந்து பெய்த கனமழையால் ஆலையை பாதுகாத்து வந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வெள்ளநீர் நேரடியாக ஆலைக்குள் புகுந்து, அங்கு இருந்த ஆயிரக்கணக்கான எல்பிஜி சிலிண்டர்களை பதால்கங்கா ஆறு மற்றும் கர்பாடா கால்வாய் பகுதிகளுக்கு அடித்துச் சென்றது.
ஆற்றில் ஆயிரக்கணக்கான சிலிண்டர்கள் மிதந்து செல்லும் காட்சிகளை அப்பகுதி மக்கள் பாலத்தின் மீது நின்று ஆச்சரியத்துடன் செல்போன்களில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
மேலும் படிக்க: இந்தியாவை உலுக்கிய வயநாடு நிலநடுக்கம்.. 2வது நாளாக 5 பேரை தேடும் பணிகள் தீவிரம்!
இதற்கிடையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்களில் சில முழுமையாக எரிவாயு நிரப்பப்பட்டவையாக இருக்கக்கூடும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இந்தச் சூழலில், ஆற்றங்கரை மற்றும் வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் மிதந்து வந்த சிலிண்டர்களை பொதுமக்களில் சிலர் போட்டி போட்டுக்கொண்டு எடுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிலிண்டர்கள் வெடிக்கும் அபாயம் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை:
आपदा में अवसर ढूंढना कोई हमसे सीखे 😯
हमारे देश में भी सब अजीब लोग हैं बारिश की बजह से HP का Cylinder पानी के साथ बह जा रहा है 😱
लेकिन लोग अपना अपना काम कर रहे हैं इतना तेज पानी में सिलेंडर को लेने के लिए पानी में उतरकर बाहुबली बन रहे हैं 😃☹️ pic.twitter.com/BKr5Mknjor
— Subhajit Das (@SantaniSubhajit) July 9, 2026
இதுகுறித்து ராய்காட் மாவட்ட ஆட்சியர் கிஷன் ஜாவ்லே பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்களில் எரிவாயு உள்ளதா, அவை பாதுகாப்பான நிலையிலா என்பது உறுதியாக தெரியாததால், அவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்வதோ, திறந்து பார்ப்பதோ அல்லது பயன்படுத்த முயற்சிப்பதோ மிகவும் ஆபத்தானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இருக்கா? கவலை வேண்டாம்.. மாற்றுவது எப்படி? ஆர்.பி.ஐ விளக்கம்
எனவே, பொதுமக்கள் தங்களிடம் கிடைத்துள்ள சிலிண்டர்களை உடனடியாக அதிகாரிகளிடம் அல்லது ஹெச்பிசிஎல் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அந்த சிலிண்டர்களை ஹெச்பிசிஎல் நிறுவன அலுவலகம், அருகிலுள்ள ஹெச்பிசிஎல் விநியோகஸ்தர்கள், கலாபூர் தாசில்தார் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் (SDO) அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.