AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆஸ்திரேலியாவில் வந்தே மாதரம் பாடல் இசைத்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு – வைரலாகும் வீடியோ

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியன் - இந்தியன் ஆர்கெஸ்ட்ரா வழங்கிய மா துஜே சலாம்' இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியின் வீடியோவை தனது எக்ஸ்சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, இசைக்குழுவின் நிகழ்ச்சியை வெகுவாக பாராட்டினார்.

ஆஸ்திரேலியாவில் வந்தே மாதரம் பாடல் இசைத்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு – வைரலாகும் வீடியோ
பிரதமர் மோடி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 09 Jul 2026 08:32 AM IST

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியன் – இந்தியன் ஆர்கெஸ்ட்ரா வழங்கிய மா துஜே சலாம்’ இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியின் வீடியோவை தனது எக்ஸ்சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, இசைக்குழுவின் நிகழ்ச்சியை வெகுவாக பாராட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு வருகை தந்துள்ளார். ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனீஸின் அழைப்பின் பேரில் வந்துள்ள பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்திலும் அவர் தங்கியிருந்த ஹோட்டலிலும் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். பிரதமரை நேரில் காண நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ஹோட்டலில் மணிக்கணக்கில் காத்திருந்தனர். அவர் வந்தவுடன் அப்பகுதி விழாக்கோலம் பூண்டது. உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தன.

பிரதமர் மோடியின் பதிவு

 

வந்தே மாதரம் பாடலுடன் பிரதமருக்கு வரவேற்பு

வந்தே மாதரம் போன்ற தேசபக்திப் பாடல்களை இசைத்து கலைஞர்கள் பிரதமரை வரவேற்றனர். அவர்களின் இசையைக் கேட்டு மோடி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். பெண் கலைஞர்கள் வழங்கிய சிவபெருமானுக்கான பக்தி நடன நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. கலைஞர்களின் திறமையால் ஈர்க்கப்பட்ட பிரதமர் மோடி, அவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில் நிகழ்ச்சி முழுவதும் கைதட்டிப் பாராட்டினார். பின்னர், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கைகூப்பித் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இந்தப் பயணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நான் மெல்போர்ன் வந்துள்ளேன். இந்தப் பயணம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நட்பை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும். ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸுடன் நடைபெறவுள்ள ஆலோசனைகளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் முதுகெலும்பாகத் திகழும் இந்தியச் சமூகத்தினருடன் கலந்துரையாடுவதிலும் நான் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவை எதிர்கொள்ள முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம்?

இந்த மூன்று நாள் பயணத்தின் போது, ​​பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரல் சாம் மோஸ்டின் மற்றும் பல வணிகத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். குறிப்பாக பாதுகாப்புத் துறை மற்றும் யுரேனியம், அரிய வகை கனிமங்களின் = விநியோகம் ஆகியவை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்புப் போக்கைக் கட்டுப்படுத்துவதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே வலுவடைந்து வரும் இருதரப்பு உறவுகள் முக்கியப் பங்காற்றும் என்று சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Follow Us