IND vs ENG: வாழ்வா சாவா போட்டி! வெற்றியை நிலைக்குமா..? 4வது டி20 இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்!
IND vs ENG 4th T20I: 8 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இந்திய அணி பிரிஸ்டலில் உள்ள கவுண்டி ஸ்டேடியத்தில் ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதற்கு முன்பு, இந்தியா தனது ஒரே மற்றும் கடைசி டி20 சர்வதேசப் போட்டியை 2018-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்த மைதானத்தில் விளையாடியது. 8 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இந்திய அணி பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு (IND vs ENG T20 Series) இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரின் 4வது போட்டி 2026 ஜூலை 9ம் தேதியான இன்று பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடரில் ஏற்கனவே 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்திய அணிக்கு, இந்தப் போட்டி வாழ்வா சாவா போட்டியாகும். தொடரை இழப்பதைத் தவிர்க்க நினைத்தால், இந்திய அணி (Indian Cricket Team) இந்தப் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும். இந்திய நேரப்படி இரவு 10:00 மணிக்கு போட்டி தொடங்கும். அதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது இரவு 9:30 மணிக்கு டாஸ் போடப்படும்.
ALSO READ: இன்னொரு போட்டி, இன்னொரு தோல்வி.. மீண்டும் சாம்சனுக்கு வாய்ப்பா? கம்பீர் விளக்கம்!
ஷ்ரேயஸ் ஐயர் இந்திய அணியின் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டதிலிருந்து, இந்திய அணியின் செயல்பாடு ஏமாற்றமளிப்பதாக இருந்து வருகிறது. மேலும், இந்திய அணியால் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இந்தத் தொடர் தோல்விகள் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மீது குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கேப்டனாக தன்னை நிரூபிப்பதற்கும், இந்திய அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திருப்புவதற்கும் இதுவே ஷ்ரேயஸுக்குக் கிடைக்கும் கடைசி மற்றும் மகத்தான வாய்ப்பாக இருக்கும்.




ஸ்டேடியத்தில் இந்தியாவின் செயல்திறன் என்ன?
8 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இந்திய அணி பிரிஸ்டலில் உள்ள கவுண்டி ஸ்டேடியத்தில் ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதற்கு முன்பு, இந்தியா தனது ஒரே மற்றும் கடைசி டி20 சர்வதேசப் போட்டியை 2018-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்த மைதானத்தில் விளையாடியது. 8 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இந்திய அணி பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதற்கு முன்பு, இந்தியா தனது ஒரே மற்றும் கடைசி டி20 சர்வதேசப் போட்டியை 2018-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்த மைதானத்தில் விளையாடியது.
அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து, 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை எடுத்தது. 199 ரன்கள் என்ற பிரம்மாண்டமான இலக்கைத் துரத்திய இந்திய அணிக்காக ரோஹித் சர்மா தனது அதிரடியான ஆட்டமிழக்காத சதம் மூலம் இந்தியா வெறும் 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி, ஒரு மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்தது.
ALSO READ: இந்திய அணிக்கு இத்தகைய நிலைமையா? 3 மோசமான சாதனைகள் படைப்பு!
இங்கிலாந்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதாஸ்டேடியத்தில் இங்கிலாந்தின் செயல்பாடு அவ்வளவு சிறப்பாக இல்லை. இங்கிலாந்து அணி இதுவரை இங்கு 5 டி20 போட்டிகளில் விளையாடி, 2ல் வெற்றி பெற்று 3ல் தோல்வியடைந்துள்ளது. எனவே, இங்கிலாந்து தங்களது செயல்பாட்டை மேம்படுத்தி, தொடரைக் கைப்பற்ற முயற்சிக்கும்.