AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sourav Ganguly Birthday: பிறந்தநாளில் கங்குலிக்கு சூப்பர் கிப்ட்.. வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Sourav Ganguly Story First Look Release: கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த பேச்சுவார்த்தை சில காலமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக, இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்பது முடிவு செய்யப்படவில்லை. பின்னர், இந்தப் படத்தில் தாதா கதாபாத்திரத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். இந்த 2026ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

Sourav Ganguly Birthday: பிறந்தநாளில் கங்குலிக்கு சூப்பர் கிப்ட்.. வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சௌரவ் கங்குலி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Jul 2026 16:55 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி இன்று அதாவது 2026 ஜூலை 8ம் தேதி தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ‘தாதா: தி சௌரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சௌரவ் கங்குலியின் மிகவும் மறக்க முடியாத தருணத்தை ராஜ்குமார் ராவ் மீண்டும் உருவாக்கியுள்ளார். போஸ்டரில் ராஜ்குமார் ராவின் தோற்றம், இளம் வயது சௌரவ் கங்குலியை (Sourav Ganguly) நினைவூட்டுகிறது. இதற்காக, நடிகரின் முடி அலங்காரம், முகபாவனை மற்றும் உடல்வாகு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டரை வெளியிட்டதோடு, படக்குழுவினர் படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளனர். இதையடுத்து, இப்படம் வருகின்ற 2027 மே 14 அன்று வெளியாகும்.

ALSO READ: தொடர் தோல்வி.. ஜிம்பாப்வே செல்லாத கம்பீர்.. பயிற்சியாளரை மாற்றுகிறதா பிசிசிஐ..?

கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த பேச்சுவார்த்தை சில காலமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக, இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்பது முடிவு செய்யப்படவில்லை. பின்னர், இந்தப் படத்தில் தாதா கதாபாத்திரத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். இந்த 2026ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை விக்ரமாதித்ய மோட்வானி இயக்குகிறார். லவ் ரஞ்சன் மற்றும் அன்குர் கார்க் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். டி-சீரிஸ், டிபிஎல் மற்றும் லவ் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இப்படத்தைத் தயாரிக்கின்றன.

இந்தப் படத்தில் என்ன சிறப்பு?

 

View this post on Instagram

 

A post shared by RajKummar Rao (@rajkummar_rao)


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவிக்கு சௌரவ் கங்குலி உயர்ந்தது முதல், அவரது வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு கங்குலி ஆற்றிய பங்களிப்பு வரை, கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கிய மைல்கற்களை இந்தப் படம் காட்சிப்படுத்தும். படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கானது கடந்த 2002 ஜூலை 13 அன்று இந்தியா நாட்வெஸ்ட் டிராபி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற தருணத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. வெற்றிக்குப் பிறகு, கங்குலி தனது ஜெர்சியைக் கழற்றி லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியிலிருந்து சுழற்றினார். இந்தக் கொண்டாட்டம் அந்த நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கங்குலியின் கேப்டன்சியின் கீழ், இந்திய அணியின் நம்பிக்கை வளர்ந்தது, மேலும் அந்த அணி வெளிநாடுகளிலும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டது.

ALSO READ: சொதப்பிய பேட்ஸ்மேன்கள் – இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா படுதோல்வி

சௌரவ் கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கை

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி இந்தியாவுக்காக மொத்தம் 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 7212 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 35 அரை சதங்களும் அடங்கும். ஒருநாள் போட்டிகளில், அவர் 311 போட்டிகளில் பேட்டிங்கில் 11363 ரன்கள் எடுத்துள்ளார். இத்துடன், அவர் டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இது தவிர, அவர் 2008 முதல் 2012 வரை ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். கடந்த 2019 முதல் 2022ம் ஆண்டு வரை பிசிசிஐ தலைவராகவும் கங்குலி பதவி வகித்தார்.

Follow Us