AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026: கலக்கிய கோல் கீப்பர்.. 72 ஆண்டுகளுக்குப் பிறகு! காலிறுதிக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து..!

Switzerland Football Team: வான்கூவரில் நடைபெற்ற கொலம்பியா மற்றும் சுவிட்சர்லாண்ட்து இடையிலான ஆட்டம், காலிறுதிக்கு முந்தைய சுற்றின் இறுதி ஆட்டமாகும் . இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி காலிறுதிப் போட்டிக்கான அணியை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், வெற்றியாளரைத் தீர்மானிக்க கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் ஆனது.

FIFA World Cup 2026: கலக்கிய கோல் கீப்பர்.. 72 ஆண்டுகளுக்குப் பிறகு! காலிறுதிக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து..!
சுவிட்சர்லாந்து கால்பந்து அணிImage Source: FIFA
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Jul 2026 15:54 PM IST

2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் (FIFA World Cup 2026) ஒவ்வொரு சுற்றிலும், ஏதேனும் ஒரு அணி சரித்திரம் படைத்து வருகிறது. அர்ஜென்டினாவுக்கு (Argentina) எதிரான காலிறுதிக்கு முந்தைய போட்டியில் எகிப்து அணி, வெற்றிக்கு அருகில் வந்து கிட்டத்தட்ட தவற விட்டது. அதேநேரத்தில், இந்தச் சுற்றின் கடைசிப் போட்டியில், சுவிட்சர்லாந்து 72 ஆண்டுகாலக் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்தது. கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில், பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து வெற்றி பெற்று, 1954-க்குப் பிறகு முதல் முறையாகக் காலிறுதிக்கு முன்னேறியது. ஷூட் அவுட்டில் ஒரு பெனால்டியைத் தடுத்து, கோல்கீப்பர் கிரிகோர் கோபல் சுவிட்சர்லாந்தின் வெற்றிக்கு நாயகனாகத் திகழ்ந்தார்.

ALSO READ: FIFA உலகக் கோப்பை: அதிர்ச்சி கொடுத்த எகிப்து.. திருப்பி அடித்த மெஸ்ஸி.. பரபர ஆட்டம்!

2 மணி நேரமாக எந்த கோல் கூட இல்லை..

வான்கூவரில் நடைபெற்ற கொலம்பியா மற்றும் சுவிட்சர்லாண்ட்து இடையிலான ஆட்டம், காலிறுதிக்கு முந்தைய சுற்றின் இறுதி ஆட்டமாகும் . இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி காலிறுதிப் போட்டிக்கான அணியை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், வெற்றியாளரைத் தீர்மானிக்க கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் ஆனது. தங்களின் சில நட்சத்திர வீரர்கள் இல்லாமல் விளையாடியதால், இரு அணிகளாலும் ஆட்டம் முழுவதும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. தென் அமெரிக்க அணியான கொலம்பியா, சுவிட்சர்லாந்து அணிக்கு அழுத்தத்தைக் கொடுத்தபோதிலும், 90 நிமிடங்கள் முழுவதும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

இதற்குக் காரணம் சுவிட்சர்லாந்து கோல்கீப்பர் கிரெகர் கோபல் தான். கிரெகர் கோபல் முதல் 90 நிமிடங்களில் 2 சிறப்பான தடுப்புகளைச் செய்தார். சுவிட்சர்லாந்தும் சில வாய்ப்புகளை உருவாக்கியபோது, கோல் அடிக்கத் தவறியது. பின்னர் ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது. இங்கும் இரு அணிகளும் 30 நிமிடங்கள் கோல் அடிக்கத் தவறின. மீண்டும் ஒருமுறை, கோபல் கொலம்பியாவின் தாக்குதலை முறியடித்து அற்புதமாகச் செயல்பட்டார். மொத்தத்தில், 120 நிமிடங்களில் கொலம்பியா 15 முறை சுவிட்சர்லாந்து கோல் கம்பத்திற்கு அருகில் சென்றது. அதில், 3 ஷாட்கள் மட்டுமே இலக்கை எட்டின. இருப்பினும், கோல்கீப்பர் அந்த மூன்றையும் தடுத்தார்.

72 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி:

இறுதியில் பெனால்டி ஷூட் அவுட் மூலம் வெற்றி யாருக்கு என்று தீர்மானிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தின் 28 வயதான கோல்கீப்பர் கோபல், முதல் முறையாக ஒரு ஷூட் அவுட்டில் பங்கேற்றார். புள்ளிவிவரங்களின்படி, இந்தப் போட்டிக்கு முன்பு, கோபல் தனது தொழில்முறை வாழ்க்கையில் 57 விதமான பெனால்டிகளை எதிர்கொண்டு, அவற்றில் 10-ஐ மட்டுமே தடுத்திருந்தார். ஆனால், தனது முதல் ஷூட் அவுட்டிலேயே ஹீரோவாக உருவெடுத்தார்.

ALSO READ: இந்தியா மட்டுமல்ல… உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட 8 நாடுகளும் பங்கேற்கவில்லை.. முழு பட்டியல் இதோ!

கொலம்பியாவின் 2வது பெனால்டியை டேவின்சன் சான்செஸ் தவறவிட்டார், அது கோல் கம்பத்தில் பட்டது. சுவிட்சர்லாந்தின் மானுவல் அகன்ஜியும் 3வது பெனால்டியைத் தவறவிட்டார். ஆரம்பத்தில் 3-3 என்ற பெனால்டிக்குப் பிறகு, ஆட்டத்தின் புள்ளி 2-2 என சமநிலையில் இருந்தது. பின்னர், கொலம்பியாவின் நான்காவது பெனால்டி தோல்விக்கு வழிவகுத்தது. கோல்கீப்பர் கோபெல், குச்சோ ஹெர்னாண்டஸின் பெனால்டியை தடுத்தார். அதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து, அடுத்த 2 பெனால்டிகளையும் கோலாக மாற்றி, ஷூட் அவுட்டில் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 72 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

 

Follow Us