Ind vs Eng : சொதப்பிய பேட்ஸ்மேன்கள் – இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா படுதோல்வி
Ind vs Eng : இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டிநாட்டிங்ஹாமில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இதனையடுத்து இங்கிலாந்து அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாட்டிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. இந்தப் போட்டியில் இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் ஒரு சாதனையைப் படைத்தார். தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெறாத பிரின்ஸ், 3வது போட்டியில் அணியில் சேர்க்கப்பட்டார். உலகின் மிக ஆபத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஜோஸ் பட்லரை, தான் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழக்கச் செய்து அவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
கலக்கிய பிரின்ஸ் யாதவ்
இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸின் ஆறாவது ஓவரை பிரின்ஸ் யாதவிடம் பந்துவீசினார். அவருக்கு எதிராக இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் நின்றிருந்தார். பிரின்ஸ் யாதவ் மின்னல் வேகத்திலான யார்க்கர் பந்தை வீசினார். அந்தத் துல்லியமான யார்க்கரைத் தடுக்க பட்லர் தனது பேட்டை இறக்க முயன்றார், ஆனால் பந்தின் வேகமும் துல்லியமான திசையும் அவரை முற்றிலும் நிலைகுலையச் செய்தன. பந்து அவரது பேட்டைத் தாண்டிச் சென்று, காலில் பட்டுத் தெறித்து ஸ்டம்புகளைத் தகர்த்தது; இது இந்திய ரசிகர்களுக்குக் கொண்டாட்டத்திற்கான தருணமாக அமைந்தது.
இதையும் படிக்க : IND vs ENG: 3வது டி20யிலும் இந்திய அணி தோற்றால்.. இதுபோன்று நடப்பது இதுவே முதல் முறை!




இங்கிலாந்து அணிக்கு சீரான இடைவேளைகளில் விக்கெட்டுகள் விழுந்தாலும் அந்த அணியின் ரன் வேட்டை தொடர்ந்தது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பில் சால்ட் அதிரடியாக ஆடிய 3 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் என 44 பந்துகளில் 70 ரன்கள் அடித்து நம்பிக்கை அளித்தார். அவருடன் களமிறங்கிய ஜோஸ் பட்லர் 2 சிக்சர், 4 பவுண்டரிகள் என 21 பந்துகளளில் 36 ரன்கள் அடித்து இளம் வீரர் பிரின்ஸ் யாதவ் பந்தில் அவுட்டானார். இதனையடுத்து சீரான இடைவேளைகளில் விக்கெட்டுகள் விழ இங்கிலாந்து அணி தடுமாறியது.
இந்த நிலையில் கடைசி கட்டத்தில் ஜோடி சேர்ந்த சாம் கரணம் மற்றும் வில் ஜாக்ஸ் சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். கடைசி ஓவரில் ரன் அவுட் முறையில் வில் ஜாக்ஸ் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இதையும் படிக்க : IND vs ENG: காயத்தால் வெளியேறிய நிதிஷ் குமார் ரெட்டி.. 2 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய ஆல்ரவுண்டரை களமிறக்கிய பிசிசிஐ!
ஆனால் சீரான இடைவேளைகளில் இந்திய அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒரு கட்டத்தில் 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இதனையடுத்து 11.4 ஓவர்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.