ஒருபோதும் என் மனைவிக்கு துரோகம் செய்ய மாட்டேன் – நடிகர் மாதவன்
Actor Madhavan recent interview viral on social media | பான் இந்திய மொழிகளில் பிரபலமான நடிகராக உள்ளார் நடிகர் மாதவன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனது மனைவிக்கு ஒரு நாளும் துரோம் செய்ய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
பான் இந்திய மொழிகளில் தற்போது பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் மாதவன். இவர் கடந்த 1996-ம் ஆண்டு இந்தி மொழியில் வெளியான இஸ் ராத் கி சுபா நஹின் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். இந்தப் படத்தில் அவர் சிறிய வேடத்தில் நடித்து இருந்தாலும் அதனைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இந்தி சினிமாவில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய நடிகர் மாதவன் அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் படங்களில் நடித்து வந்த நடிகர் மாதவன் அவ்வபோது ஆங்கில மொழிப் படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் கடந்த 2000 ஆண்டு முதல் காலடி வைத்தார்.
அலைபாயுதே என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து இவர் நாயகனாக தமிழ் சினிமாவில் நடித்த பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் மாதவனின் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் ஜிடி. நாய்டு. பீரியட் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் மாதவன் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ஒருபோதும் என் மனைவிக்கு துரோகம் செய்ய மாட்டேன்:
நான் ஒருபோதும் என் மனைவிக்கு துரோகம் செய்யமாட்டேன். அழகான நடிகைகளுடன் இணைந்து நடித்தபோதும், என் மனைவிக்குத் துரோகம் செய்வதைப் பற்றி நான் ஒருமுறை கூட நினைத்ததில்லை. இதற்கான காரணம் எளிமையானது. நான் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் மனைவியை ஏமாற்றிவிட்டு, அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க நான் தயாராக இல்லை. கடவுள் எனக்கு அளித்த அந்த ஒரு நல்ல மனைவியே எனக்குப் போதுமானதை விட அதிகம் என்று அந்தப் பேட்டியில் மாதவன் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Arulvaan: அருள்நிதியின் ‘அருள்வான்’ பட ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் சூர்யா!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
“I Will Never Betray My Wife”
“Even when I act alongside beautiful actresses, I have never once thought about being unfaithful to my wife.
The reason is simple I come from an ordinary middle-class family.
I am not prepared to deceive my wife and then deal with the… pic.twitter.com/CiYuvBvAxJ
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) July 7, 2026