Urvashi: அவரை அந்த நிலையில் என்னால் பார்க்கமுடியாது.. கே பாக்யராஜின் இறுதிச்சடங்கிற்கு வாராத காரணத்தை வெளிப்படையாக சொன்ன ஊர்வசி!
Urvashi Explains K. Bhagyaraj Funeral Absence: தென்னிந்திய திரையுலகில் சீனியர் ஆர்டிஸ்ட்டாக இருந்துவருபவர் ஊர்வசி. இவர் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். இவர் மறைந்த கே பாக்யராஜின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவில்லை என்ற நிலையில், அதற்கான காரணத்தை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஊர்வசி (Urvashi). இயக்குநர் கே பாக்யராஜின் (K Bhagyaraj) மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர், தற்போதுவரையிலும் படங்களில் நடித்து அசத்த்திவருகிறார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து நடித்து அசத்திவரும் நிலையில், உச்ச நடிகர்களுக்கு தாயாகவும் படத்தில் நடிக்கிறார். இவரின் நடிப்பில் தமிழ் இறுதியாக பரிமளா அண்ட் கோ (Parimala And Co) என்ற படமானது வெளியானது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. நடிகை ஊர்வசி தற்போது தமிழில் பிரபல நடிகையாக இருக்க காரணமானவர் மறைந்த இயக்குநரும், நடிகருமான கே பாக்யராஜ்தான். இவரின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான “முந்தானை முடிச்சி” (Mundhanai Mudichu) என்ற படத்தின் மூலம் ஊர்வசி கதாநாயகியாக அறிமுகமானார்.
அந்த விதத்தில் இவர், இயக்குநர் கே பாக்யராஜின் மறைவிற்கு பின் அவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவில்லை. பாக்யராஜ் மற்றும் ஊர்வசி இருவருமே ரொம்பவே நெருக்கமான நண்பர்கள் என்ற நிலையில், அவர் கலந்துகொள்ளாதது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது அதுபற்றி நடிகை ஊர்வசி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: தென்னிந்தியத் படங்களைப் பார்க்கும்போது தன்னம்பிக்கை ஏற்படுகிறது – இயக்குநர் அனுராக் காஷ்யப்!




மறைந்த கே பாக்யராஜின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளாதது பற்றி ஊர்வசி:
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஊர்வசி அதில், “நான் பாக்யராஜ் சாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளாதது அனைவருக்கும் ஒரு தாற்பரியமாக இருக்கிறது அல்லவா. நான் வெளியே வந்தது எதாவது ரியாக்ஷன் கொடுத்திருக்கவேண்டும் என நினைப்பார்கள். அந்த ரியாக்ஷனை மற்றவர்கள் முன்னிலையில் காண்பிப்பதற்கு எனக்கு இஷ்டமில்லை. என் சாரின் (பாக்யராஜ்) ஆத்மாவுக்கு தெரியும், அந்த குடும்பத்திற்கு தெரியும், அதுமட்டும் தெரிந்தால் போதும். நான் பூர்ணிமா அவர்களிடமும் பேசினேன். சொல்லப்போனால் எனது மனதில் எதையும் தாங்கிக்கொள்ளும் சக்தி கிடையாது. அதனால மீடியா முன்பு ரொம்ப எமோஷனலாகி, இந்தத் டிராமாவும் போடா எந்த அவசியமும் இல்லை.
இதையும் படிங்க: விஜய் அதற்காகவே பிறந்தவர்.. காஜல் அகர்வால் ஓபன் டாக்!
அதையெல்லாம் உண்மை என எத்தனைபேர் சொல்லுவாங்க, பொய்-னு எத்தனைபேர் சொல்லுவாங்க என விமர்சனத்திற்குக்கே எல்லாம் அங்கு இடமில்லை. நம்மால் நமது எமோஷனலை சில நேரத்தில் கண்ரோல் பண்ணமுடியாது. நான் எப்போதுமே சிரிச்சி பேசணும், கலாய்க்கும் என்பதே பாக்யராஜ் சாரின் விருப்பம். அவருக்கு மிகவும் பிடித்த மாணவியாக நான் இருந்தேன். நான் அழுவது அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. அவரின் இறுதிச்சடங்கில், அவர் ஐஸ் பெட்டியில் படுத்திருப்பதை பார்க்கும் அளவிற்கு எனக்கு சக்தி கிடையாது. எனது மனதில் அவர் இன்னும் உயிருடன் நடமாடிக்கொண்டே இருக்கிறார். அவர் அப்படியே இருக்கனும்” என அதில் அவர் கூறியிருக்கிறார்.