ரூ.6 கோடி மதிப்பிலான தங்க நகைகளுடன் மாயமான ராஜஸ்தான் வியாபாரிகள்.. விமான நிலையத்தில் கைது செய்த போலீஸ்!
Rajasthan Gold Vendors Arrested In Coimbatore | கோயம்புத்தூரில் நகைக்கடை நடத்தி வந்த ராஜஸ்தான் வியாபாரிகள் திடீரென சுமார் ரூ.6 கோடி மதிப்பிலான தங்க நகைகளுடன் மாயமாகினர். இந்த நிலையில், அவர்களை இரண்டு மாதங்களாக வலைவீசி தேடி வந்த போலீசார், விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர், ஜூலை 05 : கோயம்புத்தூரின் (Coimbatore) பெரிய கடை வீதியில் நகைக்கடை நடத்தி , ரூ.6 கோடி மதிப்பிலான தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவான ராஜஸ்தான் வியாபாரிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு தங்க நகைகளுடன் மாயமான அவர்களை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.6 கோடி மதிப்பிலான தங்க நகைகள் உடன் மாயமான வியாபாரிகள்
கோயம்புத்தூரில் உள்ள பெரிய கடை வீதி பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த வியாபாரிகளான விஜய் அம்பலால் சோனி, பிரதீப் குமார் சிமன்லால் லால் சோனி ஆகிய இருவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் சுமார் ரூ.6 கோடி மதிப்பிலான தங்க நகைகள் உடன் மே 22, 2026 அன்று கோயம்புத்தூரில் இருந்து தீடீரென மாயமாகியுள்ளனர். அவர்கள் நகைகள் உடன் மாயமான தகவல் அறிந்து கடும் அதிர்ச்சிக்கு உள்ளான பாதிக்கப்பட்ட தங்க நகை வியாபாரிகள் பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க : சென்னையில் இருந்து திருச்சிக்கு 3 மணி நேரத்தில் பயணிக்கலாம்.. தமிழகத்தின் 2வது பெரிய விரைவுச்சாலை பணிகள் தொடக்கம்!
விமான நிலையத்தில் வைத்து இருவரையும் கைது செய்த போலீசார்
நகை வியாபாரிகளின் புகாரின் அடிப்படையில் ராஜஸ்தான் நகை வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கடந்த இரண்டு மாதங்களாக வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தான், விமான நிலையத்தில் வைத்து விஜய் அம்பலால் சோனி, பிரதீப் குமார் சிமன்லால் லால் சோனி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க : தமிழகத்தில் 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
தொடர் தீவிர விசாரணை மேற்கொள்ளும் போலீசார்
விமான நிலையத்தில் வைத்து ராஜஸ்தான் நகை வியாபாரிகளை கைது செய்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் இந்த நகை மோசடி சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.