
Women's World Cup - மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை
கடந்த சில ஆண்டுகளாக மகளிர் கிரிக்கெட் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது. 2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது 13வவது போட்டியாகும். இந்த மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக 7 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதேநேரத்தில், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி 2 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆனால், ஒருபோதும் வென்றதில்லை. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கடந்த 1973ம் ஆண்டு இங்கிலாந்தில் 7 அணிகளுடன் நடைபெற்றது. 60 ஓவர் போட்டியாக நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில், இந்திய அணி பங்கேற்கவில்லை. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 1978ம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட மகளிர் உலகக் கோப்பையில் முதல் முறையாக களமிறங்கியது.
India women vs Sri Lanka women: மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா பிளாக்பஸ்டர் வெற்றி.. இலங்கை வீழ்த்தி அசத்தல்!
Women's Cricket World Cup: இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் வெற்றியில் தீப்தி சர்மாவின் ஆல்ரவுண்ட் செயல்திறன் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. இலங்கை அணி பேட்டிங் செய்தபோது தீப்தி சர்மா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி வலுவான தாக்கத்தை ஏற்படுத்தினார்.
- Mukesh Kannan
- Updated on: Oct 1, 2025
- 00:05 am IST