தாய்லாந்தின் அடர்ந்த காடுகளில் மர்மமாக வாழும் ஃபயர் டைகர் என்று அழைக்கப்படும் அரிய காட்டு விலங்கு மீண்டும் கேமராவில் பதிவாகியுள்ளது. கடந்த 2025 ஜூன் 20ஆம் தேதி தெற்கு தாய்லாந்தில் உள்ள கோ லாங் தேசிய பூங்காவில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த டிரெயில் கேமராவில் இந்த அரிய காட்சி பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 10 விநாடிகள் மட்டுமே நீடித்த அந்த வீடியோவில், ஒரு சூரிய ஒளி படர்ந்த பாதையை அமைதியாக கடந்து செல்கிறது அந்த விலங்கு. சில நொடிகள் நின்று சுற்றிப் பார்த்ததும், அடர்ந்த புதர்களுக்குள் சென்று மறைந்து விட்டது.