Womens World Cup 2025: பெண்கள் கிரிக்கெட் விளையாட தேவையில்லை.. வைரலாகும் சவுரவ் கங்குலியின் பழைய வீடியோ!
Sourav Ganguly's Old Video: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியிடம், கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஒருவர் சவுரவ் கங்குலியிடம் உங்களது மகள் சனா கிரிக்கெட் விளையாடினால் எப்படி உணருவீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
                                2025ம் ஆண்டு ஐசிசி மகளிர் உலகக் கோப்பை (ICC Womens Cricket World Cup) இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றது. கிரிக்கெட்டை தங்கள் வாழ்க்கையாக மாற்ற விரும்பும் பெண்களுக்கு இது ஒரு உத்வேகமாக இருக்கும் என்பதால், இந்திய மகளிர் அணிக்கு (Indian Womens Cricket Team) இது மிகப்பெரிய தருணம். இதுமட்டுமின்றி, இந்திய மண்ணில் கிடைத்த வெற்றி இந்திய மகளிர் அணிக்கு இன்னும் சிறப்பானதாக்கியது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றியை இந்தியா ஒட்டுமொத்தமாக கொண்டாடியப்போது, முன்னாள் பிசிசிஐ சவுரவ் கங்குலியின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ALSO READ: கிரிக்கெட்டில் மங்கிய வாய்ப்பு.. பயிற்சியாளராக பயணம்.. யார் இந்த அமோல் மஜும்தார்..?




என்ன சொன்னார் சவுரவ் கங்குலி..?
What if Sana(his daughter) wishes to play cricket?
“I’ll tell her not to because women are not required to play cricket.” https://t.co/BouIb5Q9Hx pic.twitter.com/dBIAmRFM4z
— R (@CrimsonScalpel) November 3, 2025
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியிடம், கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஒருவர் சவுரவ் கங்குலியிடம் உங்களது மகள் சனா கிரிக்கெட் விளையாடினால் எப்படி உணருவீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சவுரவ் கங்குலி, “பெண்கள் கிரிக்கெட் விளையாட வேண்டிய அவசியமில்லை என்பதால் நான் அவளிடம் வேண்டாம் என்று கூறுவேன்” என்று தெரிவித்தார். இது அப்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ALSO READ: இந்திய அணிக்கு ஆதரவு! நமது கிரிக்கெட் வீரர்கள் எங்கே? விளாசிய தென்னாப்பிரிக்கா எழுத்தாளர்!
இந்த காணொளியானது இசை கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் நடந்த ஒரு பார்ட்டியில் சவுரவ் கங்குலி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் இந்திய கிரிக்கெட் வீரராக சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. முன்னதாக, சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது தந்தையின் நற்பெயரால் எதிர்கொள்ள வேண்டிய அழுத்தம் குறித்து விவாதித்து கொண்டிருந்தபோது கங்குலி இந்த கருத்தை தெரிவித்தார். அப்போதுதான் நிகழ்ச்சி தொகுப்பாளர் குறுக்கிட்டு, சனா கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகிறாரா என்று கேட்டார். அப்போது, தொகுப்பாளர் மீண்டும் ஒருமுறை சனா கிரிக்கெட் விளையாட விருப்பம் தெரிவித்ததாக கேட்டபோது கங்குலி, “சனா ஒரு கிரிக்கெட் வீரராக மாறுவதில் ஆர்வம் காட்டவில்லை. நான் ஐபிஎல்லில் விளையாடும்போது, அவர் அடிக்கடி ஸ்டேடியத்தில் பார்க்க வருவார். அதுவும் படிப்படியாக குறைந்துவிட்டது” என்றார்.