IND W vs SA W Final: சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ஜாக்பாட்! கோடியை அள்ளப்போவது இந்தியாவா..? தென்னாப்பிரிக்காவா..?
IND-W vs SA-W Final Prize Money: 2025 மகளிர் உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு 4.48 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 40 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கும். இந்தியாவில் நடைபெறும் 2023 ஆண்கள் உலகக் கோப்பையில், சாம்பியன் அணிக்கு 4 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2025 செப்டம்பர் 30ம் தேதி தொடங்கிய ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 (ICC Womens World Cup 2025) இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இன்று அதாவது நவம்பர் 2ம் தேதி இந்த உலகக் கோப்பை போட்டியின் பைனல் நடைபெறவுள்ளது. இதில், புதிய உலக சாம்பியன் யார் என்பது தீர்மானிக்கப்படும். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (IND W vs SA W) அணியிலிருந்து யார் பட்டத்தை வென்றாலும் வரலாற்றைப் படைப்பார்கள். ஏனெனில், இரு அணிகளும் முதல் முறையாக சாம்பியன்களாக மாறுவதற்கு அருகில் உள்ளன. 2025 உலகக் கோப்பையை உயர்த்துவதன் மூலம் மட்டுமல்ல, இந்த முறை சாம்பியன் ஆகும் அணி அதிக பரிசுத் தொகையை பெறவுள்ளது. இதன்மூலம், புதிய அணி எவ்வளவு பரிசுத்தொகையை பெறும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
இறுதிப்போட்டி எப்போது..?
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான இறுதிப் போட்டி இன்று அதாவது 2025 நவம்பர் 2ம் தேதி மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு புதிய அணி மகளிர் உலகக் கோப்பையின் சாம்பியனாக முடிசூடப்பட இருக்கிறது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி இரண்டு முறை இறுதிப் போட்டியில் விளையாடி, இரண்டு முறையும் தோல்வியடைந்துள்ளது. இதற்கிடையில், தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு வருகிறது. இந்த இறுதிப் போட்டி ஏற்கனவே வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.
ALSO READ: பைனலில் இந்தியா – தென்னாப்பிரிக்கா.. மழையால் போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?




பரிசுத்தொகை எவ்வளவு..?
2025 ஒருநாள் மகளிர் உலகக் கோப்பையில் ஏற்கனவே ஏராளமான சாதனைகளை முறியடித்துள்ளது. போட்டிகளில் அதிக ஸ்கோர்கள் முதல் சதங்கள் என பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அனைத்து சாதனைகளுடன், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பரிசுத் தொகையும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் பிரமாண்டத்திற்கு சேர்த்துள்ளது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பே ஐசிசி தலைவர் ஜெய் ஷா சாதனை பரிசுத் தொகையை அறிவித்தார். இது வேறு எந்த ஆண்கள் உலகக் கோப்பையின் தொகையையும் விட அதிகமாகும்.
2025 மகளிர் உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு 4.48 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 40 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கும். இந்தியாவில் நடைபெறும் 2023 ஆண்கள் உலகக் கோப்பையில், சாம்பியன் அணிக்கு 4 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பையை காட்டிலும், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் பரிசுத்தொகை அதிகம் ஆகும். அதேநேரத்தில், இந்த உலகக் கோப்பையில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 2.24 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 20 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கும். மேலும், ஒவ்வொரு அணிக்கும் ஏற்கனவே 250,000 டாலர்கள் பரிசுத் தொகை உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில், லீக் ஸ்டேஜ் போட்டியில் ஒவ்வொரு வெற்றிக்கும் 34,314 டாலர் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
ALSO READ: பைனலில் இந்தியா – தென்னாப்பிரிக்கா.. இதுவரை உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?
ஐசிசியை விட அதிக பணம் தரும் பிசிசிஐ:
இந்தியா அல்லது தென்னாப்பிரிக்கா எந்த அணி சாம்பியனாக வந்தாலும், குறைந்தபட்சம் ரூ 40 முதல் ரூ. 42 கோடி வரை கிடைக்கும். அதேநேரத்தில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பட்டத்தை வென்றால், ஐசிசி பரிசுத் தொகையை விட பிசிசிஐயிடமிருந்து அதிகமாகப் பெறலாம். இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால், 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய ஆண்கள் அணியைப் போலவே வாரியத்திடமிருந்து அதே பரிசுத் தொகையைப் பெறலாம். முன்னதாக, 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றபோது, பிசிசிஐ ரூ.125 கோடி வழங்கியது குறிப்பிடத்தக்கது.