Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND W vs SA W: பைனலில் இந்தியா – தென்னாப்பிரிக்கா.. இதுவரை உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?

India vs South Africa Women's World final 2025: வருகின்ற 2025 நவம்பர் 2ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியை இந்திய மகளிர் அணி (IND W vs SA W) எதிர்கொள்ளும். இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும். 

IND W vs SA W: பைனலில் இந்தியா – தென்னாப்பிரிக்கா.. இதுவரை உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?
உலகக் கோப்பையை வென்ற அணிகள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Nov 2025 08:40 AM IST

2025 மகளிர் உலகக் கோப்பையின் (ICC Womens World cup) 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. முன்னதாக, இந்த போட்டியில் நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை தென்னாப்பிரிக்கா அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம், 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பைக்கான 2 இறுதிப் போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டது. இதன்படி, வருகின்ற 2025 நவம்பர் 2ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியை இந்திய மகளிர் அணி (IND W vs SA W) எதிர்கொள்ளும். இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

முதல் இறுதிப்போட்டி:

இது தென்னாப்பிரிக்காவின் முதல் மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியாகும். அதே நேரத்தில் இந்தியா இதற்கு முன்பு 2005 மற்றும் 2017 ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. போட்டியின் வரலாற்றில் ஒரு புதிய சாம்பியனைப் பெறுவது இதுவே முதல் முறை. அதாவது, இத்தனை ஆண்டுகால மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணி இல்லாமல் இறுதிப்போட்டி நடைபெறபோவது இதுவே முதல் முறையாகும். இதுவரை நடந்த மகளிர் உலகக் கோப்பை 12 பதிப்புகளில் ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக 7 முறை பட்டத்தை வென்றுள்ளது. இங்கிலாந்து 4 முறையும், நியூசிலாந்து ஒரு முறையும் வென்றுள்ளது.

ALSO READ: கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள்.. நாக் அவுட்டில் நங்கூர ரன் சேஸ்.. இந்திய மகளிர் குவித்த சாதனைகள்!

இதுவரை மகளிர் உலகக் கோப்பையை வென்ற அணிகள்:

பதிப்பு ஆண்டு வெற்றியாளர் வெற்றி பெறுங்கள் இரண்டாம் இடம்
1வது 1973 இங்கிலாந்து 92 ரன்கள் ஆஸ்திரேலியா
2வது 1978 ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் இங்கிலாந்து
3வது 1982 ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் இங்கிலாந்து
4வது 1988 ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் இங்கிலாந்து
5வது 1993 இங்கிலாந்து 67 ரன்கள் நியூசிலாந்து
6வது 1997 ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் நியூசிலாந்து
7வது 2000 ஆம் ஆண்டு நியூசிலாந்து 4 விக்கெட்டுகள் ஆஸ்திரேலியா
8வது 2005 ஆஸ்திரேலியா 98 ரன்கள் இந்தியா
9வது 2009 இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் நியூசிலாந்து
10வது 2013 ஆஸ்திரேலியா 114 ரன்கள் மேற்கிந்திய தீவுகள்
11 வயசு 2017 இங்கிலாந்து 9 ரன்கள் இந்தியா
12வது 2022 ஆஸ்திரேலியா 71 ரன்கள் இங்கிலாந்து

ALSO READ: 25 ஆண்டுகளுக்குப் பிறகு! மகளிர் உலகக் கோப்பையில் புதிய அணி சாம்பியன்..? இந்தியாவா? தென்னாப்பிரிக்காவா?

போட்டி ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்?

2025 உலகக் கோப்பையில் பல போட்டிகள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. நவி மும்பையில் நடந்த பல போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, வருகின்ற 2025 நவம்பர் 2 ஆம் தேதி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான ஆட்டத்தில் மழை குறுக்கிட்டால், போட்டி நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறும். இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் நாளாக வருகின்ற 2025 நவம்பர் 3 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 2025 நவம்பர் 3 ம் தேதி மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டு முடிவு எட்டப்படாவிட்டால், புள்ளிகள் பட்டியலில் அதிக புள்ளிகளைப் பெற்ற அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும். தென்னாப்பிரிக்காவுக்கு 10 புள்ளிகளும், இந்தியாவுக்கு 7 புள்ளிகளும் உள்ளன. எனவே, தென்னாப்பிரிக்கா உலக சாம்பியனாகும்.