இந்தியா, பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள கம்பி வேலியில், தொங்கும் காலி கண்ணாடி பாட்டில்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அது, நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் எளிய திறமையான பாதுகாப்பு முறை. இந்தியாவின் எல்லை பகுதிகள் அடர்ந்த காடுகள், கடினமான மலைப்பகுதிகள், பனியால் மூடப்பட்ட பிரதேசங்கள் போன்ற சவாலான இடங்களில் அமைந்துள்ளன. இத்தகைய பகுதிகளில் எல்லா இடங்களிலும் உயர்தர கண்காணிப்பு கருவிகள், சென்சார்கள், சிசிடிவி கேமராக்கள் அமைப்பது சாத்தியமில்லை. மேலும், மழை, பனி, மின்சார தடை போன்ற காரணங்களால் மின்னணு சாதனங்கள் செயலிழக்கவும் வாய்ப்பு உள்ளது.