AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஜடேஜா இல்லை! ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இளம் வீரர் நியமனம்!

Rajasthan Royals: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரியான் பராக்-ஐ கேப்டனாக நியமித்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு, சஞ்சு சாம்சன் காயமடைந்தபோது, ​​சில போட்டிகளில் ரியான் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஐபிஎல் 2025 சீசனில் ராஜஸ்தான் அணிக்காக ரியான் பராக் 8 ஐபிஎல் போட்டிகளில்  வழிநடத்தி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 7 முறை தோல்வியடைந்தது.

IPL 2026: ஜடேஜா இல்லை! ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இளம் வீரர் நியமனம்!
ரியான் பராக்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Feb 2026 22:59 PM IST

2026 டி20 உலகக் கோப்பைக்கு (2026 T20 World Cup) மத்தியில் ஐபிஎல் 2026 (IPL 2026) தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் தங்கள் அணிக்கு புதிய கேப்டனின் பெயரை அறிவித்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான் அணி 24 வயதான இளம் பேட்ஸ்மேனை கேப்டனாக நியமித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. வரவிருக்கும் 2026 ஐபிஎல் சீசனில், சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் காரணமாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இனி புது கேப்டன்கீழ் களமிறங்கும். இந்த வீரர் கடந்த 7 சீசன்களாக ராஜஸ்தான் அணியின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ராஜஸ்தான் அணிக்காக இதுவரை 84 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 7 அரைசதங்கள் உள்பட 1566 ரன்கள் எடுத்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில், யார் இந்த வீரர் என்று தெரிந்து கொள்வோம்.

கேப்டன்சி அனுபவம்:


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரியான் பராக்-ஐ கேப்டனாக நியமித்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு, சஞ்சு சாம்சன் காயமடைந்தபோது, ​​சில போட்டிகளில் ரியான் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஐபிஎல் 2025 சீசனில் ராஜஸ்தான் அணிக்காக ரியான் பராக் 8 ஐபிஎல் போட்டிகளில்  வழிநடத்தி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 7 முறை தோல்வியடைந்தது. இதன் காரணமாக, ஐபிஎல் 2025-ல் ராஜஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்தது. இருப்பினும், பேட்டிங்கில் ரியான் சிறப்பாக செயல்பட்டு, 14 போட்டிகளில் 393 ரன்கள் எடுத்தார். இதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 166.53 ஆகும். மேலும், கேகேஆருக்கு எதிராக 95 ரன்கள் எடுத்து ஆக்ரோஷமான இன்னிங்ஸை விளையாடினார்.

ராஜஸ்தானை விட்டு வெளியேறிய ராகுல் டிராவிட்:

சஞ்சு சாம்சனுடன், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் வரவிருக்கும் ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேறினார்.  டிராவிட்டிற்குப் பிறகு, முன்னாள் இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா இப்போது தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். சங்கக்காரா 2021 முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநராக இருந்து வருகிறார். 2021 முதல் 2024 வரை அணியின் தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றினார். இப்போது அவர் மீண்டும் இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

இதற்கிடையில், கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ராஜஸ்தான் அணியில் ரவீந்திர ஜடேஜாவையும் சேர்த்துள்ளது. எனவே, ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட வாய்ப்பிருந்ததாக கூறப்பட்டது. இருப்பினும், இப்போது ராஜஸ்தான் இந்தப் பொறுப்பை ரியான் பராக் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Follow Us