ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு அறிவித்த எம்.எஸ். தோனி.. 2027 முதல் சிஎஸ்கே அணியின் புதிய பொறுப்பு!
M.S Dhoni Retirement: இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான எம்.எஸ். தோனி, ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவர் புதிய அவதாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பயணிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
நவம்பர் 17, 2026: இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான எம்.எஸ். தோனி, ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவர் புதிய அவதாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பயணிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, 2027ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணியின் வழிகாட்டியாக (Team Mentor) தோனி பொறுப்பேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதன் மூலம் களத்தில் வீரராக அவரது பங்களிப்பு முடிவுக்கு வந்தாலும், அணியின் வழிகாட்டியாக தொடர்ந்து செயல்பட உள்ளார். ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தோனிக்கு இருக்கும் நீண்டகால உறவு இதன் மூலம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தகவல்கள் அப்டேட் செய்யப்படுகிறது..