AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Cyclone Akvan: நவம்பர் 20-ம் தேதி கரையை கடக்கும் அக்வான் புயல்.. வட கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு?

Rainfall Alert: நாளை (நவம்பர் 18) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், வட கடலோர தமிழகத்தின் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Cyclone Akvan: நவம்பர் 20-ம் தேதி கரையை கடக்கும் அக்வான் புயல்.. வட கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Nov 2026 14:48 PM IST

நவம்பர் 17, 2026: வங்கக்கடலில் உருவான அக்வான் (Akvan) புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், நவம்பர் 20ஆம் தேதி நெல்லூர் – துனி இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையை மிகத் தீவிரப் புயலாகக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 20ஆம் தேதி கரையை கடக்கும் அக்வான் புயல்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று (நவம்பர் 16) வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மாலை 5.30 மணியளவில் அக்வான் புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்த இந்தப் புயல், இன்று (நவம்பர் 17) காலை 8.30 மணியளவில் தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது இன்று மாலை தீவிரப் புயலாகவும், நவம்பர் 19ஆம் தேதி காலை மிகத் தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் 20ஆம் தேதி நண்பகல் நெல்லூர் – துனி இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையை மிகத் தீவிரப் புயலாகக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 145 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகடலோர மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

இன்று (நவம்பர் 17) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

நாளை (நவம்பர் 18) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், வட கடலோர தமிழகத்தின் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: மக்கள் வரிப்பணத்தில் டெல்லி பயணமா? தவெக ஆட்சியில் தமிழகத்துக்கு பெரும் ஆபத்து.. திமுக விடுத்த எச்சரிக்கை!

நவம்பர் 19ஆம் தேதி சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 20ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், நவம்பர் 21ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: அரசு பேருந்தை நிறுத்தி டாஸ்மாக் கடையில் மது வாங்கிய விவகாரம் – ஓட்டுநர், நடத்துநர் பணி நீக்கம்

நவம்பர் 22ஆம் தேதி கடலோர தமிழகத்தின் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 23ஆம் தேதி தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மழை இருக்குமா?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

நாளை (நவம்பர் 18) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us