ரிலீஸிற்கு மூன்று நாட்களே உள்ள ஓ.எம் படம்… புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
O.M Movie New Poster Out Now | தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த வகையில் அவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓ.எம். இந்தப் படத்தின் புது போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி ஹாலிவுட் வரை படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். சினிமாவில் பல துறைகளில் தனது திறமையை வெளிபடுத்தி உள்ள நடிகர் தனுஷின் நடிப்பில் இந்த ஆண்டில் முன்னதாக கர படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் அப்பா மகன் பாசத்தை மையமாக வைத்து வெளியாகி இருந்தது. படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது மட்டும் இன்றி ஓடிடியில் வெளியான போதும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவானது தான் ஓ.எம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தினை எழுதி இயக்கி உள்ளார். செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த ஓ.எம் படம் உருவாகி உள்ளது என்பது படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது. மேலும் இந்தப் படத்தில் பல முன்னணி நடிகர்களும் இணைந்து நடித்து உள்ளனர்.




ரிலீஸிற்கு மூன்று நாட்களே உள்ள ஓ.எம் படம்:
தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள இந்த ஓ.எம் படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தனுஷின் மனைவியாக நடிகை ஸ்ரீலீலா உள்ள நிலையில் அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… Silambarasan: சிம்புவின் அரசன் பட ஷூட்டிங் நிலவரம் என்ன? இன்னும் முடியாததற்கு காரணம் இதுவா?
ஓ.எம். படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Love and warmth all over 🥰
#OM arrives in cinemas, 20th November. Get ready for an emotional, entertaining ride.
A @Rajkumar_KP Film
@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @agscinemas @archanakalpathi @aishkalpathi @PharsFilm @SitharaEnts @WarnerMusicIN #BinuGeorgeAlexander @DreamBig_film_s @jsujithnair @PenMovies #PenMarudhar @ThinkStudiosInd @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
— Wunderbar Films (@wunderbarfilms) November 17, 2026
Also Read… பிக்பாஸில் கேப்டனான தன்யா… திட்டமிட்டு கடுப்பேற்றும் ஜேசன் – வைரலாகும் வீடியோ