சாய் பல்லவி ரொம்ப சுத்தமான மனசு உள்ளவர்.. சீதைக்கு அவர்தான் கரெக்ட்- தனுஷ் ஓபன் டாக்!
Dhanush praises Sai Pallavi: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் கொண்டாடப்படும் நாயகனாக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் ஓ.எம். திரைப்படமானது வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில் இசைவெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், சாய் பல்லவி குறித்து புகழ்ந்துள்ளார். மேலும் சீதையின் வேடத்திற்கு அவர்தான் சரியான ஆள் என அவரை பாராட்டியுள்ளார்.
நடிகர் தனுஷ் (Dhanush) தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இந்த 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் பான் இந்திய திரைப்படம்தான் ஓ.எம் (O.M Movie). இப்படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Director Rajkumar Periasamy) இயக்கியுள்ள நிலையில், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் தனுஷ் ஸ்பை அதிகாரியாக நடித்துள்ள நிலையில், அவரின் மனைவியாக ஸ்ரீலீலா (Sreeleela) நடித்துள்ளார்.
மேலும் மிகவும் முக்கியமான வேடத்தில் மம்முட்டி (Mammootty) மற்றும் சாய் பல்லவி (Sai Pallavi) இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவின்போது பேசிய தனுஷ், சாய் பல்லவியின் நடிப்பு மற்றும் ராமாயணத்தில் அவர் சீதையாக நடித்தது குறித்தும் புகழ்ந்துள்ளார்.
இதையும் படிங்க: 9 நாட்கள் முடிவில்… சூர்யாவின் சீன் படம் தமிழகத்தில் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
சாய் பல்லவியின் நடிப்பு குறித்து புகழ்ந்து பேசிய தனுஷ்:
அந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “சாய் பல்லவி நடித்த ராமாயணா படம் வெளிவந்திருக்கு, வாழ்த்துக்கள் சாய் பல்லவி. அவர் சீதையாக நடித்த வேடத்திற்கு பின் நிறைய சத்தம் இருக்கிறது. எனக்கு புரியவில்லை. அவர் ஓ.எம் பட ஷூட்டிங்கின்போது அடுத்த ஷாட் எடுக்கும் நேரத்தில் கூட பக்தியுடன் ஜெபித்துக்கொண்டே இருப்பார்.
இதையும் படிங்க: பல்லவி அழுக்காதீங்க.. அத பாத்து நானும் – ராஜ்குமார் சாரும் அழுதோம் – சாய் பல்லவி சொன்ன சம்பவம்!
அவ்வளவு கடவுள் பக்தி இருக்குறவங்க.. சுத்தமான மனசு இருக்குறவவங்க.. இவ்வளவு இவ்வளவு அழகாக இருக்காங்க. நடிப்பில் சிறந்தவர், இந்திய முழுவதும் தேடினாலும் இவரை போல சீதையை கண்டுபிடிக்க முடியாது, வாழ்த்துக்கள்” என அதில் தனுஷ் பேசியுள்ளார்.
நடிகை சாய் பல்லவி குறித்து நடிகர் தனுஷ் பேசியது தொடர்பான வீடியோ பதிவு:
#Dhanush on the Criticism Surrounding #SaiPallavi’s Portrayal of Sita in #Ramayana:
“There was a lot of noise around her playing the role of Sita.. I don’t get it.. She even prays during the gaps between shots.. She has so much devotion to God.. She has a pure heart.. She’s beautiful.. A great performer.. Even if you search across the whole of India, you won’t find another Sita like her..” 🤝 https://t.co/enCh2DGk46
— Laxmi Kanth (@iammoviebuff007) November 14, 2026
தனுஷின் ஓ.எம் திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி அதிரடி ஆக்ஷன், வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவர் சீக்ரட் ஏஜண்டாக இருக்கும் தனுஷின் முன்னாள் காதலியாக இருக்கும் என வட்டாரங்களில் தகவல்கள் கூறப்படுகிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில் இப்படமானது உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



