பல்லவி அழுக்காதீங்க.. அத பாத்து நானும் – ராஜ்குமார் சாரும் அழுதோம் – சாய் பல்லவி சொன்ன சம்பவம்!
Sai Pallavi About Rajkumar Periasamy: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் தனது நடிப்பு மற்றும் இயற்கை அழகின் மூலம் கவர்ந்துவருபவர் சாய் பல்லவி. இவர் தனுஷின் ஓம் திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சாய் பல்லவில், ராஜ்குமார் பெரியசாமி குறித்து சுவாரஸ்யமான சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
மலையாளம் திரையுலகின் மூலம் சினிமாவில் நாயகியாக நுழைந்து, தற்போது பான் இந்திய பிரம்மாண்ட நடிகையாக உருவெடுத்திருப்பவர் சாய் பல்லவி (Sai Pallavi). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவர் பாலிவுட்டில் நடித்திருந்த ராமாயணா பார்ட் 1 (Ramayana: Part 1) படமானது வெளியாகியிருந்தது. ஹாலிவுட் தரத்தில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், திரையரங்குகளில் வெளியாகி இதுவரை சுமார் ரூ 1000 கோடிகளுக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. இந்த படத்துடன் தமிழில் இவர் நடித்துவந்த திரைப்படம்தான் ஓ.எம் (O.M Movie). இதில் நடிகர் தனுஷுடன் (Dhanush) மிகவும் முக்கியமான வேடத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். இதில் அவர் வனத்துறை உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அந்த விதத்தில் சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
இதையடுத்து தற்போது இப்படக்குழு ப்ரோமோஷன் பணியில் இறங்கியுள்ளது. சமீபத்தில் நேர்காணலில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy) இணைந்து கலந்துகொண்டனர். அதில் ராஜ்குமார் குறித்து சுவாரஸ்யமான சம்பவத்தை சாய் பல்லவி பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: சுயநலம்… ஸ்டேர்டஜி… குரூப்பிசம்… பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து பேசிய விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ!
ராஜ்குமார் குறித்து சுவாரஸ்யமான சம்பவத்தை பற்றி சொன்ன சாய் பல்லவி:
அதில் பேசிய சாய் பல்லவில், “விஜய் சாரின் தீவிர ரசிகர் என்று யாரையாவது உங்களுக்குத் தெரிந்தால், அது ராஜ்குமார்பெரியசாமி சாராகதான் இருக்க வேண்டும். நானும் ராஜ்குமார் பெரியசாமி சாரும் ஒரு ஷூட்டிங்கில் இருந்தபோது, அன்றுதான் தளபதி 69 படத்தின் அறிவிப்பு வந்தது, அதுதான் விஜய் சாரின் கடைசி திரைப்படம், ஒன் லாஸ்ட் டைம் என்ற ப்ரோமோ ஓன்று வெளியானது.
இதையும் படிங்க: சூரா சூரா.. 2 ஆண்டுகளை கடந்தது சூர்யாவின் கங்குவா திரைப்படம்!
நான் ஏற்கனவே ரொம்ப எமோஷனலான நபர், நான் அந்த ப்ரோமோவை பார்த்து எமோஷனலாக கண்கலங்கி இருந்தேன். உடனே அருகே இருந்த ராஜ்குமார் சார், “அழுக்காதீங்க பல்லவி, நீங்க அழுதாள் நன்றாக இருக்காது” என என்னிடம் கூறினார். அவரை பார்த்தல், அவர் எனக்கும் மேல் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்கிறார். இதற்கு முன்பு அவரை அப்படி நான் பார்த்ததே இல்லை” என அதில் அவர் கூறியிருந்தார்.
ஓ.எம் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
Apologies for the delay, and it’s now time to unleash the mayhem 🔥
#OM TRAILER OUT NOW.
▶️ https://t.co/sCECMmVyi6
Coming to the screens worldwide on November 20.
A @Rajkumar_KP Film.
@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @agscinemas @archanakalpathi @aishkalpathi @PharsFilm @SitharaEnts @WarnerMusicIN #BinuGeorgeAlexander @DreamBig_film_s @jsujithnair @PenMovies #PenMarudhar @ThinkStudiosInd @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
— Wunderbar Films (@wunderbarfilms) November 13, 2026
தனுஷின் ஓம் திரைப்படமானது மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ் ஒரு அண்டர்கவர் ஸ்பை போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் நடித்துள்ளார். இதில் மிகப்பெரிய கேங்ஸ்டரான மம்முட்டியின் கடத்தல் விவரங்களை அறிவதற்கு அவர் செய்யும் பணிகள் மற்றும் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் மம்முட்டி போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் 2026 நவம்பர் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



