ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது அன்பில் அவன் படக்குழு – வைரலாகும் அப்டேட்!
Anbil Avan Movie OTT Update | நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான படம் அன்பில் அவன். இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்ததாக ஓடிடியில் எப்போது வெளியாக உள்ளது என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன் (Actor Ashok Selvan). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் அன்பில் அவன். இந்தப் படம் கடந்த 2-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை பிரீத்தி முகுந்தன் நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
அதன்படி நடிகர்கள் ரேவதி, சாபுமோன் அப்துசமத், கதிர்பாலு, மகா டெல்லி கணேஷ், ஆகாஷ் முருகன், ஜவஹர் சக்தி, எஸ்.தனுஷன் மற்றும் தீபன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது அன்பில் அவன் படக்குழு:
தொடர்ந்து இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அன்பில் அவன் படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் அன்பில் அவன் படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு சோனி லிவ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ஓம் படத்தில் சாய் பல்லவியோட வேடம் அந்த ஐபிஎஸ் இன்ஷ்பிரேஷன் தான் – ராஜ்குமார் பெரியசாமி!
சோனி லிவ் ஓடிடி நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Love can make you fight battles you never imagined 🔥
#AnbilAvan Streaming from Nov 20 only on #SonyLIV
@AshokSelvan @PreityMukundan
#AnbilAvan #SonyLIV #SonyLIVTamil https://t.co/lEpnmvrIY9— Sony LIV Tamil (@SonylivTam) November 14, 2026