AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நாகர்ஜுனாவின் கிங் 100 படத்தில் இணைந்த அசோக் செல்வன் – இயக்குநர் வெளியிட்ட பதிவு

Ashok Selvan joins King 100 movie | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி அவ்வபோது தெலுங்கு மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகர்ஜுனாவின் கிங் 100 படத்தில் இணைந்த அசோக் செல்வன் – இயக்குநர் வெளியிட்ட பதிவு
அசோக் செல்வன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Nov 2026 12:56 PM IST

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் அசோக் செல்வன் (Ashok Selvan). இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். அறிமுகம் ஆன படத்தை தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே நாயகனாக நடிக்கத் தொடங்கினார் நடிகர் அசோக் செல்வன். தொடர்ந்து இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் நடிகர் அசோக் செல்வன் தொடர்ந்து பிசியான நாயகனாக நடித்து வரும் நிலையில் அவ்வபோது தெலுங்கு மொழியிலும் படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் அன்பில் அவன்.

ரொமாண்டிக் ட்ராமா பாணியில் உருவான இந்த அன்பில் அவன் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நாகர்ஜுனாவின் கிங் 100 படத்தில் இணைந்த அசோக் செல்வன்:

அந்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்பது தற்போது உறுதி ஆகி உள்ளது. அதன்படி தெலுங்கு சினிமாவில் நடிகர் நாகர்ஜுனா நடிப்பில் உருவாகி வருகின்றது கிங் 100 படம். இந்தப் படத்தில் நடிகர் அசோக் செல்வன் இணைந்துள்ளதாக முன்பு வெளியான தகவலை உறுதி செய்யும் விதமாக இயக்குநர் ரா கார்த்திக் தனது எக்ஸ் தள பகக்த்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் நடிகர் அசோக் செல்வனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்ததுடன் கிங் 100 படத்தில் அசோக் செல்வன் கர்ணா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… Sai Pallavi: விஜய் சார் என்ற சாய் பல்லவி.. அதிர்ந்த ஓம் பட ஆடியோ லான்ச் அரங்கம் – வைரலாகும் வீடியோ!

இயக்குநர் ரா கார்த்திக் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… குழந்தை மூஞ்சியில் ஒரு கொலைகாரி… பிக்பாஸில் சீக்ரெட் டாஸ்க் குறித்து பேசிய விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ

Follow Us