AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Sai Pallavi: விஜய் சார் என்ற சாய் பல்லவி.. அதிர்ந்த ஓம் பட ஆடியோ லான்ச் அரங்கம் – வைரலாகும் வீடியோ!

Sai Pallavis About CM Vijay: தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்து, தற்போது பான் இந்திய சினிமாவில் நாயகியாக கலக்கிவருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் நேற்று (06/11/2026) ஓம் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றிருந்தது. அந்த இசைவெளியீட்டின்போது பேசிய சாய் பல்லவி, முதல்வர் விஜய் என கூறியதும் அரங்கம் அதிரும் வகையில் சத்தம் எழுந்தது. அது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Sai Pallavi: விஜய் சார் என்ற சாய் பல்லவி.. அதிர்ந்த ஓம் பட ஆடியோ லான்ச் அரங்கம் – வைரலாகும் வீடியோ!
சாய் பல்லவி மற்றும் முதல்வர் விஜய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Nov 2026 17:01 PM IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்துவருபவர் நடிகை சாய் பல்லவி (Sai Pallavi). இவர் மலையாள சினிமாவில் நடிகையாக நடித்து, தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியிருந்தார். இவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது மாரி 2 (Maari 2). இந்த படத்தில் தனுஷுக்கு (Dhanush) ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்கள் நாயகியாகவே நடிக்க தொடங்கியிருந்தார். இறுதியாக இவர் தமிழில் அமரன் (Amaran) என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பின் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் நடித்துள்ள திரைப்படம்தான் ஓம் (OM Movie). அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Director Rajkumar Periasamy) இயக்கத்தில், இப்படம் உருவாகியுள்ளது.

இதில் தனுஷ் நாயகனாக நடிக்க, அவருடன் முக்கியமான வேடத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (06/11/2026) சென்னையில் ஸ்ரீராம் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சின்போது பேசிய சாய் பல்லவி, முதல்வர் விஜய் குறித்து பேசியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஓம் பட இசை வெளியீட்டு விழாவில் கலகலப்பாக பேசிய மம்முட்டி – வைரலாகும் வீடியோ

முதல்வர் விஜய் குறித்து சாய் பல்லவி பேசியது தொடர்பாக இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு:

இந்த வீடியோவில், நடிகை சாய் பல்லவி, “நம்ம விஜய் சார் இப்போதுதான் அரசியலில் நுழைந்திருக்கிறார்” என கூறியிருந்தார். உடனே ஓம் பட ஆடியோ லான்ச்சில் இருந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடியிருந்தனர். மேலும் அந்த சத்தத்தில் அரங்கமே அதிர்ந்திருந்தது. உடனே சாய் பல்லவி, சிரித்தபடியே இருந்தார். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. மேலும் ரசிகர்கள் இந்த பதிவின் கீழ் கருத்துக்களை பதிவிட்டுவருகிறார்கள்.

ஓம் திரைப்படத்தில் சாய் பல்லவியின் வேடம்:

இந்த ஓம் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ஸ்ரீலீலா நடித்துளளார். மேலும் இவருடன் மம்முட்டி மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை சாய் பல்லவி முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: சில துளி அமிர்தத்தை மட்டுமே சுவைத்துக்கொண்டிருந்த எனக்கு பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது – இயக்குநர் எஸ்யு அருண்குமார் எமோஷ்னல் பதிவு!

இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி, நித்யா ரெட்டி என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். நடிகை போலீஸ் அதிகாரியாக முதல் முதலில் இப்படத்தில்தான் நடித்துள்ளார். இதில் சாய் பல்லவி, ஆந்திர பெண்ணாக நடித்திருக்கும் நிலையில், இவருக்கு இப்படம் மூலம் தெலுங்கிலும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us