AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மக்கள் என் பக்கம் இருக்காங்க…. அரசியல் குறித்து முதன்முறையாக மனம் திறந்த தனுஷ் – விமர்சனங்களுக்கு பதில்

Dhanush Political Controversy Response : ஓம் படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி நவம்பர் 6, 2026 தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக தனுஷின் அரசியல் வருகை பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் அதுகுறித்து நடிகர் தனுஷ் விளக்கமளித்துள்ளார்.

மக்கள் என் பக்கம் இருக்காங்க…. அரசியல் குறித்து முதன்முறையாக மனம் திறந்த தனுஷ் – விமர்சனங்களுக்கு பதில்
தனுஷ்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 06 Nov 2026 22:23 PM IST

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஓம். இந்தப் படம் வருகிற நவம்பர் 20, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி நவம்பர் 6, 2026 தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக தனுஷின் அரசியல் வருகை பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தனுஷின் (Dhanush) பேச்சைக் கேட்க அனைத்து தரப்பினரும் ஆவலாக காத்திருந்தனர்.

அரசியல் குறித்து முதன்முறையாக மனம் திறந்த தனுஷ்

இந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், நாம என்ன பேசினாலும் ஏதாச்சும் சொல்லுவாங்க. ஓம் படத்தில் 5 ஹீரோக்கள் இருக்காங்க. மம்மூட்டி சார், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, சாய் அபயங்கர்… கடைசியா தான் நான். இது மல்டி ஹீரோ படம். ராஜ்குமார் மாதிரி ஒருவரை என் வாழ்நாளில் சந்தித்தது இல்லை. அவர் மீதும் அவர் கதையின் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவருக்கு ஒருவரிடம் இருந்து எப்படி வேலை வாங்க வேண்டும் என தெரியும். இதுவரை நான் பாட்டு பாடி அதை தூக்குன ஒரே இசையமைப்பாளர் சாய் தான் என்றார்.

இதையும் படிக்க : Ajith Kumar: அஜித் குமாரின் டேர் டெவில் திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜை கிளிம்ப்ஸ் வீடியோ!

மேலும் பேசிய அவர் என்னுடைய ரசிகர்களுக்கு, நிறைய நல்ல திட்டங்களை பண்ணிட்டு இருக்கீங்க. என் பணத்தை நான் செலவிடவில்லை. உங்கள் பணத்தை என் பெயரில் செலவிடுகிறீர்கள். உங்கள் குடும்பத்தின் தேவைக்கு போக உங்களிடம் பணம் இருந்தால் அதை செலவிடுங்கள். உங்கள் குடும்பம் பாதிக்கக்கூடாது.

மேலும் ஒரு கோரிக்கை, நவம்பர் மற்றும் டிசம்பரில் மழை ருக்கும். கடந்து போய்விட்டோம் என்றால் சந்தோஷம். அப்படி இருந்தா நீங்கள் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். என்னை வாழ்நாள் முழுவதும் குறைத்து எடை போட்டு கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னை மட்டம் தட்ட தட்ட அவங்களுக்கு தெரியாம என்னை மோட்டிவேட் பண்றாங்க. அப்படி இருந்து ஜெய்க்கிறதுல தான் ஒரு கிக் இருக்கு.

அரசியல் சர்ச்சை குறித்து பேசிய தனுஷ்… என் பின்னாடி யாரோ இருக்கிறதா சொல்றாங்க. யாரோ என்னை இயக்குவதாக சொல்கிறார்கள். ஆனால் என்னை இயக்குவது இறைவன். என் பின் இருப்பது ரசிகர்களும் மக்களும் தான் மக்கள் என் பக்கம் என்றார்.

118304

இந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மம்மூட்டி,நான் இந்த படத்தில் நடித்த நடிகர்களிடம் இருந்து டிப்ஸ் கிடைக்கும் என நினைத்தேன். நடிகர் தனுஷ், சாய் பல்லவியின் கதாப்பாத்திரம் சிறப்பாக வந்திருக்கிறது. இது தனுஷின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும். சாய் பல்லவியை ஏன் ஹீரோனு சொன்னேன் என்றால் பொதுவாக ஹீரோக்கள் தான் படத்துல சண்டை போடுவாங்க. ஆனால் சாய் பல்லவி சண்டை போட்டா ஹீரோக்கள் தோத்துடுவாங்க. புரூஸ் லீ மாதிரி சண்டை போட்றாங்க என்றார்.

Follow Us