AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பொது வாழ்வில்…. நடிகர் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

தமிழக முதல்வர் விஜய், நடிகர் கமல்ஹாசனுக்கு வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துப் பதிவில், தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவும். தாங்கள் கலைத்துறை மற்றும் பொது வாழ்வில் மேலும் பல சிறப்புகளைப் பெற்று, மக்களுக்கான தங்கள் அர்ப்பணிப்பான பணிகளைத் தொடர்ந்து சிறப்புடன் ஆற்றிட என் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பொது வாழ்வில்…. நடிகர் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
கமல்ஹாசன் - முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 06 Nov 2026 20:57 PM IST

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நவம்பர் 7, 2026 நாளை தனது பிறந்த நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் (CM Joseph Vijay) அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். முன்னதாக எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் சண்டியர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “அன்பிற்கினிய கமல்ஹாசனுக்கு, தங்களின் நவம்பர் 7, 2026ஆம் தேதி பிறந்தநாளையொட்டி, என்னுடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவும். தாங்கள் கலைத்துறை மற்றும் பொது வாழ்வில் மேலும் பல சிறப்புகளைப் பெற்று, மக்களுக்கான தங்கள் அர்ப்பணிப்பான பணிகளைத் தொடர்ந்து சிறப்புடன் ஆற்றிட என் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : மாடலிங் ஆசை காட்டி ரூ. 20 லட்சம் மோசடி – இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை – கோவையில் பகீர் சம்பவம்

முன்னதாக முதல்வர் விஜய் பொறுப்பேற்றுக்கொண்ட போது நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், தமிழ்நாடு முதல்வர், தம்பி விஜய்யின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும். என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தாிருந்தார். மேலும் நேரிலும் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

23 ஆண்டுகளுக்கு மீண்டும் சண்டியர்

இதற்கிடையில் கமல்ஹாசன் நடிப்பில் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள சண்டியர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தைத் தொடர்ந்து 2வது முறையாக கமல்ஹாசனுடன் அனிருத் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சண்டியர் என்ற படத்தின் தலைப்பு மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.

முன்னதாக கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்து 2004 ஆம் ஆண்டில் வெளியான விருமாண்டி திரைப்படம் முதலில் சண்டியர் என பெயரிடப்பட்டுள்ளது.சண்டியர் என்ற தலைப்பு ஒரு குறிப்பிட்ட சாதியை குறிப்பிடுவது போல் உள்ளதாக சர்ச்சை உருவானது. குறிப்பாக இந்த தலைப்பு வைத்தால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் படிக்க : பள்ளி வேனில் காத்திருந்த சிறுமி.. கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை.. திருவள்ளூரில் வக்கிர புத்தியுடைய வேன் ஓட்டுநர் கைது!

இதனையடுத்து தலைப்பு மாற்றப்பட்டு விருமாண்டி என்ற பெயரில் படம் வெளியானது. இது தொடர்பாக கமல்ஹாசன் வருத்தத்துடன் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ இன்றளவும் ரசிகர்களிடையே வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிைலயில் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு சண்டியர் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் சில தமிழ் படங்கள் சண்டியர், வரான் பாரு சண்டியர் என்ற தலைப்புகளில் வெளியாகியுள்ளது. குறிப்பிடத்தக்கது.

Follow Us