AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பறவைகளுக்காக 25 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமம் – கோவையில் வித்தியாசமான தீபாவளி கொண்டாட்டம்

Cracker Free Diwali Celebration : கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கிட்டாம்பாளையம் என்ற கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பட்டாசு இல்லாமல் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. பறவைகள் மீதான அக்கறையே இதற்கு பின்னால் இறுக்கும் காரணம் என கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பறவைகளுக்காக 25 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமம் – கோவையில் வித்தியாசமான தீபாவளி கொண்டாட்டம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 06 Nov 2026 17:18 PM IST

கோயம்புத்தூர், நவம்பர் 6 : தீபாவளி என்றாலே சட்டென நினைவுக்கு வருவது பட்டாசுகள் (Crackers) தான். பலர் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு முன்பு இருந்தே பட்டாசுகளை கொளுத்த தொடங்கி விடுவார்கள். பக்கத்து வீட்டுக்காரர்களுடன் யார் வெடி சத்தம் அதிகம் வந்தது என போட்டிக்கொண்டு பட்டாசு வெடிப்பது வழக்கம். அதிகாலையிலேயே புத்தாடை உடுத்தி பட்டாசுடன் தீபாவளியை கொண்டாடுவது காலங்காலமாக இருந்து வரும் வழக்கம். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் ஒரு கிராமம் 25 ஆண்டுகளாக பட்டாசு இல்லாமல் தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.

25 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமம்

கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கிட்டாம்பாளையம் என்ற கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பட்டாசு இல்லாமல் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. பறவைகள் மீதான அக்கறையே இதற்கு பின்னால் இறுக்கும் காரணம். இந்த கிராமத்தில் இருக்கும் மிக பழமையான கிராமங்களில் பறவைகள் மற்றும் வவ்வால்கள் வசித்து வருகின்றன. அதிக அளவிலான புகை மற்றும் சத்தங்களால் பறவைகள் பாதிக்கப்படக் கூடாது என இந்த முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: நெருங்கும் தீபாவளி – அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை – எங்கெல்லாம் தெரியுமா?

மேலும் அந்த கிராமத்து முன்னோர்கள் எடுத்த முடிவை இந்த காலத்து இளைஞர்களும் தொடர்ந்து கடை பிடித்து வருவதும் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் அவர்களது நண்பர்கள் பட்டாசு தொடர்பான பேச்சுக்கள் ஆர்வத்தை தூண்டினாலும் தங்கள் கிராமத்தின் முன்னோர்களின் முடிவால் பட்டாசு வெடிப்பதில்லை என்ற முடிவெடுத்திருக்கிறார்கள்.

கிட்டாம்பாளையத்தில் உள்ள பழமையான ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட மரங்களில் ஏராளமான வவ்வால்கள் மற்றும் பறவைகள் வசித்து வருவதாக கூற்படுகிறது. கடந்த காலங்களில் பட்டாசு வெடிப்பதால் அவை கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் பிறகே, பறவைகளின் வாழ்விடத்தை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் கிராமத்தில் உள்ள பெரியோர்களும் இளைஞர்களும் இணைந்து பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளனர். அன்று எடுக்கப்பட்ட முடிவை 25 ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர். அன்று தொடங்கிய இந்த நடைமுறை தற்போது 25 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது.

பறவைகளுக்காக மரங்களை வளர்க்கும் கிராம மக்கள்

பட்டாசு வெடிக்காமல் இருப்பதோடு பறவைகளுக்காக புதிதாக மறஙக்களையும் கிராம மக்கள் வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆலமரம், அரசமரம், அத்திமரம், நாவல் மரம், கொய்யா போன்ற மரங்களை வளர்த்து வருகின்றனர். இத்தகைய மரங்கள் பறவைகளுக்கு வாழ்விடமாக இருப்பதுடன் அவர்களுக்கு உணவளித்தும் வருகின்றன. இதனால் அந்த பகுதியே பசுமையாக காட்சியளிக்கிறது.

இதையும் படிக்க : திருச்சியில் பெரும் சோகம்.. மனைவி தற்கொலை செய்த அதே மின்விசிறியில் தூக்கிட்ட கணவன்.. என்ன காரணம்!

தீபாவளி  திருநாளின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு மற்றும் ஒலி மாசுபாடு குறித்து அரசு சார்பில் ஆண்டுதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக அரசு சமீபத்தில் காலை 6 முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.  இத்தகைய சூழலில், கிட்டாம்பாளையம் கிராம மக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றி வரும் நடைமுறை கவனம் பெற்றுள்ளது.

Follow Us