AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரசு அலுவலக வங்கி கணக்கில் கை வைத்த ஹேக்கர்ஸ்.. ரூ. 11 லஞ்சம் கொள்ளை.. நாகை சைபர் கிரைம் போலீஸ் விசாரணை!

Nagapattinam Panchayat Office : நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வங்கிக் கணக்கில் இருந்து இணைய வழியில் ரூ. 11 லட்சத்தை ஹேக்கர்கள் கொள்ளை அடித்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு அலுவலக வங்கி கணக்கில் கை வைத்த ஹேக்கர்ஸ்.. ரூ. 11 லஞ்சம் கொள்ளை.. நாகை சைபர் கிரைம் போலீஸ் விசாரணை!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 06 Nov 2026 17:42 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சி வங்கி கணக்குகளை அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை ( நவம்பர் 6- ஆம் தேதி) வழக்கம் போல சரிபார்த்தனர். அப்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வங்கி கணக்கில் இருந்து அதிகாரிகள் கவனத்திற்கு வராமல் ரூ. 11 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால், அதிகாரிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தனர். அத்துடன், அலுவலகத்தின் வங்கி பண பரிவர்த்தனை விவரங்களை கேட்டு விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட விசாரணையில் கேரள மாநில ஹேக்கர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

ரூ.11 லட்சம் கொள்ளை- சைபர் கிரைமில் புகார்

அரசு பொதுமக்களின் வரிப்பணத்தை கையாளும் அலுவலக வங்கி கணக்கிலேயே இணைய வழி கொள்ளையர்கள் துணிகரமாக கைவரிசை காட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, நாகப்பட்டினம் மாவட்ட இணைய வழி குற்றத்தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: திருச்சியில் பெரும் சோகம்.. மனைவி தற்கொலை செய்த அதே மின்விசிறியில் தூக்கிட்ட கணவன்.. என்ன காரணம்!

பணம் பரிவர்த்தனை தொடர்பாக தீவிர விசாரணை

இது தொடர்பாக கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வங்கி கணக்கு விவரங்கள், அந்த வங்கி கணக்கில் மேற்கொள்ளப்பட்ட பண பரிவர்த்தனைகள், தற்போது கொள்ளை அடிக்கப்பட்ட ரூ. 11 லட்சம் பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கி கணக்குகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் உள்ளிட்ட விவரங்களை சைபர் கிரைம் போலீசார் சேகரித்தனர். அதனை தீவிர ஆய்வுக்கு உட்படுத்திய போலீசார், அந்த வங்கி கணக்கு மற்றும் அதன் உரிமையாளர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளை சம்பவத்தில் தனிப்படை தேடுதல் வேட்டை

அத்துடன், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இணைய வழி கொள்ளையர்களை பிடிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் அடிப்படையில் தனிப்பட அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில், இணைய வழி கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு அலுவலக வங்கி கணக்கில் இருந்து இணைய வழியில் ரூ. 11 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: தென்காசியில் எரிந்த நிலையில் பெண் சடலம்.. நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி… போலீசார் விசாரணை!

Follow Us