AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திமுகவினர் திராவிடம் பேசுவதே கொள்ள அடிக்கதான்.. ஊழல்வாதிகளை கூண்டோடு கைது செய்க.. மெயின் பாயிண்டில் கை வைத்த மாணிக்கம்!

Manickam Tagore Letter To Cm Vijay : கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், திமுகவினர் திராவிடம் பேசுவதே கொள்ளயடிப்பதற்கு தான் என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டினார்.

திமுகவினர் திராவிடம் பேசுவதே கொள்ள அடிக்கதான்.. ஊழல்வாதிகளை கூண்டோடு கைது செய்க.. மெயின் பாயிண்டில் கை வைத்த மாணிக்கம்!
மாணிக்கம் தாகூர், மு.க.ஸ்டாலின்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 06 Nov 2026 16:51 PM IST

கோவை பெரியார் அறிவுலகத்துக்கான புத்தகங்கள் கொள்முதலில் நிகழ்ந்த ஊழல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக, அவர் முதல்வர் விஜய்க்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த திமுக ஆட்சியில் கோவையில் பெரியார் அறிவுலகம் எனும் நவீன நூலகம் கட்டப்பட்டது. 7 ஏக்கர் பரப்பளவில் சுமார் 300 கோடி மதிப்பீட்டில் 7 தளங்களை கொண்ட இந்த நூலகத்தை முதல்வர் விஜய் திறந்ததற்கு திமுகவினர் வானத்துக்கும், பூமிக்கும் குதித்தனர். மு. க. ஸ்டாலின் நவம்பர் 4- ஆம் தேதி பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்டார். அவருக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. கடந்த திமுக ஆட்சி என்பது வரலாறு காணாத ஊழல் ஆட்சி என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் பல கோடி ஊழல்

எந்த திட்டத்திலும் ஊழல் இல்லாமல் இருந்தது கிடையாது. திமுக ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளார். பள்ளிக் கல்வித் துறையில் மிகப்பெரிய ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பெரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதை சாகித்திய அகாடமி விருது பெற்ற பெருமாள் முருகன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: ஊழல் உலகமாக மாறிய பெரியார் அறிவுலகம்.. மக்கள் மன்றத்தில் திமுக நிரந்தரமாக தலை குனிவது உறுதி.. முதல்வர் விஜய் அட்டாக்!

பெரியார் அறிவுலகத்தில் உள்ள போலி நூல்கள்

பெரியார் அறிவுலகத்தின் 4- ஆம் தளத்தில் அகல்விளக்கு பதிப்பகம் வெளியிட்ட 1800 நூல்கள் இருப்பதாகவும், இந்த பதிப்பகத்தில் முகவரி உள்ளிட்ட அனைத்தும் போலி என்றும், இந்த நூல்களை எழுதியவர்கள் அனைவரும் போலி எழுத்தாளர்கள் என்றும் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டி உள்ளார். 300 பக்கங்களைக் கொண்ட நூல்களுக்கு முன்னணி பதிப்பகங்கள் ரூ.300 முதல் ரூ. 400 வரை மட்டுமே விலை நிர்ணயம் செய்கின்றனர். ஆனால், அகல் விளக்கு பதிப்பகத்தின் 300 பக்க நூல்களுக்கு ரூ. 1400- க்கும் மேல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நூல்களில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் கட்டுக்கதைகள், செயற்கை நுண்ணறிவு கொண்டு போலியாக உருவாக்கப்பட்டுள்ளன.

திமுகவினர் திராவிடம் பேசுவதே கொள்ளயடிப்பதற்கு தான்

எனவே, பெரியார் அறிவுலகத்தில் உள்ள அனைத்து நூல்களையும் ஆய்வு செய்து போலி நூல்களை உடனடியாக அகற்ற வேண்டும். செயற்கை நுண்ணறிவு மூலமாக உருவாக்கப்பட்ட போலி நூல்களை 4 மடங்கு விலை கொடுத்து வாங்கிய பெரும் ஊழல்வாதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாருக்கு துரோகம் செய்த பெரும் கொள்ளைக்காரர்களை அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவினர் திராவிடம் பேசுவதே கொள்ளை அடிப்பதற்கு தான் என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள் சர்ச்சை.. தமிழுக்குச் செய்த துரோகம் என கமல்ஹாசன் கடும் கண்டனம்!

Follow Us