திருச்சியில் பெரும் சோகம்.. மனைவி தற்கொலை செய்த அதே மின்விசிறியில் தூக்கிட்ட கணவன்.. என்ன காரணம்!
Trichy Crime : திருச்சி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவி மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய் து கொண்டார். இதையறிந்த கணவரும் மனைவி சேலையால் அதே மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர் .
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ள ரங்கா நகர் 16- ஆவது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் செல்வம் ( 51 வயது). இவரது மனைவி ராதிகா ( 37 வயது). தம்பதிக்கு விவேகா என்ற மகளும், விசாகன் என்ற மகனும் உள்ளனர். இதில், சிறுவன் விசாகன் மன வளர்ச்சி குன்றியவர் ஆவார். இந்த நிலையில், வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த செல்வம் தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அத்துடன், அவரது சொந்த ஊரான பட்டுக்கோட்டை அருகே உள்ள ஏனாதியில் சொந்தமாக வீடு கட்டி வந்தார். கடந்த சில நாட்களாக வீடு கட்டுமான பணிகளை பார்ப்பதற்காக தனது மனைவி ராதிகாவை அங்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டார்.
குடும்ப தகராறில் தூக்கில் தொங்கிய மனைவி
ஆனால், அவருடன் ராதிகா செல்வதற்கு மறுப்பு தெரிவித்து கணவருடன் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கணவன், மனைவி இடையே தகராறு முற்றிய நிலையில் செல்வம் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இதில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான ராதிகா வீட்டின் படுக்கை அறைக்கு சென்று அங்குள்ள மின்விசிறியில் கயிறால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வெளியே சென்றிருந்த செல்வம் வீடு திரும்பினார். அப்போது, மின்விசிறியில் மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, தூக்கில் இருந்து அவரை கீழே இறக்கி பரிசோதித்து பார்த்ததில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
மேலும் படிக்க: ஊழல் உலகமாக மாறிய பெரியார் அறிவுலகம்.. மக்கள் மன்றத்தில் திமுக நிரந்தரமாக தலை குனிவது உறுதி.. முதல்வர் விஜய் அட்டாக்!




மனைவி சேலையால் தூக்கிட்டுக் கொண்ட கணவர்
இதனால், மன வேதனை அதை செல்வம் தனது மனைவியின் சேலையால் அதே மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து பள்ளி முடிந்து வீடு திரும்பிய மகள் விவேகா கதவு திறக்கப்படாமல் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது தெரிய வந்தது. உடனே, இது தொடர்பாக சோமரசம்பேட்டை காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஜீயபுரம் டிஎஸ்பி சங்கர், சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் செந்தில் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சோமரசம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை
தம்பதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, செல்வத்தின் அண்ணன் கணேசன் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடு கட்டும் பிரச்சனையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: தென்காசியில் எரிந்த நிலையில் பெண் சடலம்.. நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி… போலீசார் விசாரணை!