AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: வெலிங்டனில் இந்தியா – நியூசிலாந்து 2வது ஒருநாள்.. மழையால் போட்டிக்கு அச்சுறுத்தல்!

IND vs NZ 2nd ODI Match Rain chances : இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு மழையின் அச்சுறுத்தல் நீடிக்கிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், வெலிங்டனில் நடைபெறும் இரண்டாவது போட்டிக்கு மோசமான வானிலை காரணமாக பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலத்த காற்றும், குளிரும் போட்டி ரத்து செய்யப்படலாம் என்ற நிலையை உருவாக்கி உள்ளது. இந்திய அணியின் பயிற்சி ரத்தாகியுள்ளது.

IND vs NZ: வெலிங்டனில் இந்தியா – நியூசிலாந்து 2வது ஒருநாள்.. மழையால் போட்டிக்கு அச்சுறுத்தல்!
வெலிங்டன் வானிலைImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Nov 2026 16:49 PM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (IND vs NZ) இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கிட்டத்தட்ட கைவிடப்பட்டது. அந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நாளை அதாவது 2026 நவம்பர் 7ம் தேதி வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் நடைபெறும். இரண்டாவது போட்டிக்கும் மழை அச்சுறுத்தலாக உள்ளது, மேலும் மோசமான வானிலை காரணமாக இந்தியா (Indian Cricket Team) -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ALSO READ: வெலிங்டனில் தரையிறங்கிய கோலி.. வாழ்த்து மழை பொழிந்த ரசிகர்கள்..!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியும் மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது. DLS முறைப்படி இந்திய அணிக்கு 143 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை இந்திய அணி 22.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் மீதமிருக்க எட்டினர்.

2வது ஒருநாள் போட்டியில் மழையா..?

இன்று அதாவது 2026 நவம்பர் 6ம் தேதி வெலிங்டனில் பெய்த மழையின் காரணமாக, நியூசிலாந்து அணி தங்களது பயிற்சி அமர்வை உள்ளரங்கில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கிடையில், இந்திய அணி தங்களது பயிற்சி அமர்வை ரத்து செய்ய வேண்டியிருந்ததால், அனைத்து வீரர்களும் ஹோட்டலிலேயே தங்கியிருந்தனர்.

அக்யூவெதர் தகவலின்படி, நாளை அதாவது 2026 நவம்பர் 7ம் தேதி வெலிங்டனில் மழை பெய்ய 60 சதவீத வாய்ப்புள்ளது. நியூசிலாந்து நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது, அந்த நேரத்திலும் மழை பெய்ய 60 சதவீத வாய்ப்புள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 5 மணி முதல் 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு மிகக் குறைவு, ஆனால் இந்த நேரத்தில்கூட, லேசான மழை ஆட்டத்தைப் பாதிக்கக்கூடும்.

ALSO READ: நியூசிலாந்துடன் மோதல்.. வெலிங்டனில் இந்திய அணியின் சாதனை எப்படி..?

மழை மட்டுமல்லாமல், வெலிங்டனில் கடும் குளிரும், மணிக்கு 25 கி.மீ. வரை வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். போட்டி ரத்து செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகமாகவே உள்ளது.

வெலிங்டனில் நேருக்கு நேர் சாதனை

வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் இந்தியாவும் நியூசிலாந்தும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 2 முறையும், நியூசிலாந்து ஒரு முறையும் வென்றுள்ளன. அதேநேரத்தில், ஒரு போட்டி சமனில் முடிந்தது. இந்த ஸ்டேடியத்தில் இவ்விரு அணிகளும் கடைசியாக 2019-ல் மோதின. அப்போது இந்திய அணி 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இருப்பினும், பதிலடி கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள், நியூசிலாந்தை 217 ரன்களுக்குள் சுருட்டி, 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தனர்.

Follow Us