AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

PM Modi: இது எனக்கும் உத்வேகம்.. பாரா ஆசியப் பதக்கம் வென்றவர்களைச் சந்தித்த பிரதமர் மோடி!

PM Modi Para Athletes: கடந்த 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 114 பதக்கங்களுடன் வரலாற்றின் சிறந்த சாதனையைப் படைத்தது. பிரதமர் மோடி பதக்கம் வென்றவர்களைச் சந்தித்து, அவர்களின் போராட்டங்களும் சாதனைகளும் தேசத்திற்கு உத்வேகம் அளிப்பதாகப் பாராட்டினார். திறமைகளைக் கண்டறிந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 பாராலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் வெல்வதே அடுத்த இலக்கு என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

PM Modi: இது எனக்கும் உத்வேகம்.. பாரா ஆசியப் பதக்கம் வென்றவர்களைச் சந்தித்த பிரதமர் மோடி!
பிரதமர் மோடி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Nov 2026 23:24 PM IST

கடந்த 2026 அக்டோபர் மாதம் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் (Asian Para Games 2026) இந்தியா தனது வரலாற்றிலேயே மிகச் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி, 30 தங்கம், 35 வெள்ளி மற்றும் 49 வெண்கலம் உட்பட 114 பதக்கங்களை வென்றது. இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) இன்று அதாவது 2026 நவம்பர் 5ம் தேதி ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களைச் சந்தித்து, அவர்களின் போராட்டங்களும் சாதனைகளும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கின்றன என்று கூறினார். விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் ரக்ஷா காட்சே ஆகியோரும் உடனிருந்தனர். இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்ற, கைகள் இல்லாத வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி மற்றும் பார்வை குறைபாடுள்ள ஓட்டப்பந்தய வீராங்கனை சிம்ரன் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

ALSO READ: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் – தமிழக வீரர் சிவராஜனுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை – முதல்வர் விஜய் அறிவிப்பு

பிரதமர் மோடி பெருமிதம்:

பிரதமர் மோடி கூறுகையில், “உங்களின் அபாரமான செயல்பாடு, உலக விளையாட்டுத் துறையில் இந்தியா ஒரு வல்லரசாக உருவெடுத்து வருவதைக் காட்டியுள்ளது. நீங்கள் பதக்கங்களை வென்றது மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள். உங்கள் போராட்டங்களும் சாதனைகளும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கின்றன. முன்பு, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் விளையாட்டுத் துறையில் ஒரு தொழிலைத் தொடர்வதற்கு ஆதரவளிக்க அஞ்சினர். திறமைக்கு ஆதரவளிக்காத ஒரு அமைப்பைக் கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்று மக்கள் கூறுவதுண்டு. ஆனால், நீங்கள் மனம் தளராமல் இருந்தது போலவே, நாங்களும் எங்கள் முயற்சியில் உறுதியாக இருந்தோம்.

நமது இளைஞர்களின் திறமை வீணாகக் கூடாது என நாங்கள் தீர்மானித்தோம். உங்கள் முன்னேற்றத்தைத் தடுத்த அமைப்பை மாற்ற நாங்கள் முடிவு செய்தோம். இன்றைய இளைஞர்களுக்குத் தங்கள் திறமையின் மீது நம்பிக்கை இருந்தால், நாடும் தங்களுக்குத் துணை நிற்கும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருக்கும்.” என்று கூறினார்.

இந்தியாவின் செயல்திறன் மேம்பட்டு வருகிறது..


தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “முன்னர் இந்தியாவின் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்த விளையாட்டுத் துறைகளில் நாம் வலுப்பெற்று வருகிறோம். வில்வித்தை, தடகளம், துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், மேசைப்பந்து, பூப்பந்து, ஜூடோ மற்றும் பளுதூக்குதல் போன்ற பல விளையாட்டுகளில் நாம் திறமைகளைக் கண்டறிந்துள்ளோம், மேலும் புதிய சாம்பியன்கள் உருவாகி வருகின்றனர். பாராலிம்பிக் போட்டிகளில் 61 தடகள வீரர்கள் அறிமுகமானார்கள்.

ALSO READ: இந்தியாவில் 1,200 கி.மீ. ஆக விரிவடைந்த மெட்ரோ ரயில் சேவை..- பிரதமர் மோடி பெருமிதம்!

இந்த வெற்றியை, இன்னும் பெரிய இலக்குகளை அடைவதற்கான ஒரு ஏவுதளமாகப் பயன்படுத்த வேண்டும். அடுத்த இலக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் 2028. லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக் 2028-ல் முடிந்தவரை அதிக இந்திய விளையாட்டு வீரர்கள் பங்கேற்று, அதிக பதக்கங்களை வெல்வதே எங்கள் குறிக்கோள்.” என்று கூறினார்.

Follow Us